சல்மான் ஏன் முத்தக்காட்சிகளில் நடிக்காமல் இருந்தார் - உண்மையை சொல்லிய சகோதரர் அர்பாஸ்!

சல்மான்

தனது 33 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் ஒரு போதும் பெரிய திரையில் ஒரு முத்த காட்சிகளில் கூட நடித்ததில்லை என்று பெயர் வாங்கியவர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழும் சல்மான் கான் தனது திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே 'திரையில் முத்தம் மற்றும் நிர்வாண காட்சிகளில் நடிப்பதில்லை' என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறார். கடந்த 1988-ஆம் ஆண்டு 'பிவி ஹோ தோ ஐசி' (Biwi Ho Toh Aisi) என்ற இந்தி படத்தில் அறிமுகமாகியநடிகர் சல்மான் கான், தனது 33 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் ஒரு போதும் பெரிய திரையில் ஒரு முத்த காட்சிகளில் கூட நடித்ததில்லை என்று பெயர் வாங்கியவர்.

6 ஆண்டுகளுக்கு முன் ஆதியா ஷெட்டி-சூரஜ் பஞ்சோலி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஹீரோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சல்மான், ஒரு படத்தில் முத்தக் காட்சிகள் தேவையில்லை என்று தான் கருதுவதாக கூறியிருந்தார். இப்பட தயாரிப்பளர்களுள் சல்மானும் ஒருவராவார். அப்போது இந்த திரைப்படத்திலிருந்து ஒரு முத்தக்காட்சி எடிட் செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இது குறித்து செய்தியாளர்கள் சல்மானிடம் கேட்ட போது, “படத்தில் முத்தக் காட்சி எதுவும் இல்லை. நாங்கள் ஒரு முத்தக் காட்சியை வைக்க விரும்பினோம், ஆனால் அவர்கள் (திரைப்பட தயாரிப்பாளர்கள்) மறுத்துவிட்டனர்.

நான் திரைப்படங்களில் பொதுவாக முத்தக் காட்சியில் நடிப்பதில்லை. நான் எப்படி அவர்களிடம் (சூரஜ் மற்றும் ஆதியா) முத்த கட்சியில் நடிக்குமாறு கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார். சல்மான் பேசிய மற்றொரு நேர்காணலில், அவர் தனது கதாநாயகியை திரையில் ஒருபோதும் முத்தமிட்டதில்லை என்பதற்கு உண்மையான காரணம் தான் அதை சங்கடம் மற்றும் அசிங்கமாக உணர்வதாக கூறி இருந்தார்.

Also read... Raiza Wilson : தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததற்காக ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி மருத்துவருக்கு நடிகை ரைசா நோட்டீஸ்...!

இருப்பினும் ஒரு முறை சல்மானின் சகோதரரான அர்பாஸ் கான், திரையில் முத்தமிடுவதை சல்மான் விரும்பாததற்குப் பின்னால் உள்ள ஒரு காரணத்தை வெளிப்படுத்தியிருந்தார். சல்மான் தனது சகோதரர்களான அர்பாஸ் மற்றும் சோஹைல் ஆகியோருடன், தி கபில் சர்மா ஷோவின்(The Kapil Sharma Show) செட்டிற்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அங்கு சகோதரர்கள் ஒருவருக்கொருவர் ஷாக் தரக்கூடிய பல சுவாரசிய தகவல்களை வேடிக்கையாக வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் சோனி டிவி என்டர்டெயின்மென்ட் பகிர்ந்த பழைய விளம்பரம் ஒன்றில் (2018-ம் ஆண்டு ப்ரமோ) பேசும் சல்மான், சல்மான் கூறுகிறார், பாருங்கள் நான் திரையில் யாரையும் முத்தமிடவில்லை, அதனால் அது எனக்கு ஒரு பொருட்டல்ல என்று சொல்கிறார். உடனடியாக பக்கத்தில் இருக்கும் அவரது சகோதரர் அர்பாஸ் பயங்கரமாக சிரித்து கொண்டே சொல்கிறார், " சல்மான் அடிக்கடி முத்தத்தை திரைக்கு வெளியே (off-screen) கொடுக்கிறார் என்பதால் திரையில் அதை செய்ய தேவையில்லை" என்று வேடிக்கையாக கூறுகிறார். இதை கேட்டு சல்மான் உட்பட பார்வையாளர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

இறுதியாக தனது நீண்ட கால கொள்கையான திரையில் முத்தம் கொடுப்பதில்லை என்பதை சல்மான் கைவிட்டு விட்டதாக தெரிகிறது. தனது சமீபத்திய படமான ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய் திரைப்படத்தில், சல்மான் தனது அழகான இணை நடிகர் திஷா பதானியுடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்துள்ளது ட்ரைலரில் தெரிகிறது. சல்மானின் ரசிகர்களில் ஒரு பகுதியினர் இதை பார்த்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தாலும், சில ரசிகர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் திரை வாழ்க்கையில் பாலிவுட் சூப்பர்ஸ்டாரின் முதல் திரை முத்தத்தை “இறுதியாக” காண முடிந்ததாக உற்சாகம் தெரிவித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: