ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இனிமேல் நடிப்பாரா வைகைப்புயல் வடிவேலு?

இனிமேல் நடிப்பாரா வைகைப்புயல் வடிவேலு?

வடிவேலு

வடிவேலு

நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கொத்த ரெட் இன்னும் விலகாததால் இனிமேல் அந்த மகா கலைஞன் நடிப்பாரா என்ற மிகப்பெரிய கேள்வி சினிமாத்துறையில் எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இரு தினங்களுக்கு முன் 'பேய் மாமா' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வடிவேலு பேயாக நடிக்க ஒப்பந்தமான படம் என்பதால் பொழுதுபோக்குக்கு பஞ்சம் இருக்காது என விறுவிறுப்பாக கிளம்பி போனோம். ஆனால் பேய் மாமா கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருப்பதாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சக்தி சிதம்பரம்.

ஆனால் ஆரம்ப கால விளம்பரங்களில் பேய் மாமா என்ற தலைப்பில் வடிவேலு நின்றிருந்த போஸ்டர்களை எங்களால் மறக்க முடியவில்லை. ஏன் என்று விசாரிக்கும் முன் பாடல் வெளியீட்டு விழாவை கவனித்தோம். அப்போது பேசிய இயக்குநர் சக்தி சிதம்பரம், வடிவேலு நடிப்பதாய் இருந்த கதாபாத்திரத்தில் தயக்கத்துடன் யோகிபாபு நடித்திருப்பதாக உறுதிபடுத்தினார்.

நிகழ்ச்சி முடிந்தபின் ஏன் வடிவேலு இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று விசாரிக்க ஆரம்பித்தோம். திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கூர்ந்து கவனித்தால் 2017க்கு பின் வடிவேலு எந்தப் படத்திலேயுமே நடிக்கவில்லை. அவரை யாரும் ஒப்பந்தம் செய்யாத வண்ணம் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் போட்டு வைத்துள்ளது தெரிய வந்தது.

நடிகரோ, அல்லது மற்ற தொழில்நுட்ப கலைஞர்களோ திரைத்துறையில் இருக்கும் சங்கங்களின் விதிகளை பின்பற்றவில்லை என்றால் அந்த சங்கத்தின் சார்பில் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும். அப்படி கொடுக்கப்பட்டால் அந்த சங்கத்தில் இருப்பவர்கள் அவரை அதன்பின் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள். அதனடிப்படையில் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவுக்கு 2018-ம் ஆண்டு ரெட் கார்டு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மெர்சல் படத்திற்கு பின் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க ஆரம்பித்தார் வடிவேலு. இடையில் படக்குழுவுடன் ஏதோ கருத்து மோதல் ஏற்படவே, படப்பிடிப்புக்கு வருவதை தவிர்த்தார் வடிவேலு. இந்தப் பஞ்சாயத்தை ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கொண்டு போக, வடிவேலுவுக்கு கொடுத்த முன்பணம், அதுவரை நடைபெற்ற தயாரிப்பு செலவுகள் ஆகியவற்றுடன் சேர்த்து சுமார் 9 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க: சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் தொல்லை - சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் சீரியல் நடிகை போலீசில் பரபரப்பு புகார்

நடிகர் வடிவேலு 9 கோடி ரூபாய் நஷ்ட ஈடை கொடுக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். அதன்பின் தயாரிப்பாளர்கள் யாரும் வடிவேலுவுடன் படம் பண்ண ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள். அதன்படிதான் ஏற்கனவே போஸ்டர்கள் வெளியிடப்பட்ட பேய்மாமா திரைப்படமும் வடிவேலுவின் கைவிட்டு போயிருக்கிறது.

தற்போது இருக்கும் சூழலில் வடிவேலு இனிமேல் படங்களில் நடிப்பாரா மாட்டாரா என்ற மிகப்பெரிய கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. 9 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுக்க வடிவேலு இதுவரை முன்வரவில்லை.

ஆனால் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தற்போது பிரிந்துள்ள நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் யாராவது அவரை ஒப்பந்தம் செய்ய முன்வந்தாலோ, அல்லது புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ரெட் கார்டை நீக்க முன்வந்தாலோ வடிவேலு மீண்டும் நடிக்க வாய்ப்புள்ளது.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Vadivelu, Kollywood