’பாரதி கண்ணம்மா’வில் அடுத்து நடக்கப்போவது என்ன? வெண்பா சொன்ன அப்டேட்!

பாரதி கண்ணம்மா சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதியை டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க விடுவீர்களா? என்ற கேள்விக்கு வில்லி வெண்பா இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார்.

  • Share this:
பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாரதியையும், கண்ணம்மாவை ஒன்று சேரவிடாமல் வில்லி வெண்பா ஒவ்வொரு சூழ்சிக்களையும் திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறார். அவளின் சூழ்ச்சிகளை அறியாத பாரதி, தொடர்ந்து நம்பிக்கொண்டிருக்கிறான். எந்தளவுக்கு என்றால், தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது கூட தெரியாமல் பாரதி இருக்கிறான். அதில் ஒரு குழந்தையை, தத்தெடுத்து வந்த குழந்தைபோல் நினைத்துக் கொண்டு வீட்டிலேயே வளர்க்கிறான். மேலும், கிராமம் ஒன்றில் வேலை செய்யும்போது கண்ணாம்மாவிடம் இருக்கும் மற்றொரு குழந்தையை பார்க்க நேரிடுகிறது.

அப்போது தான் பெற்ற குழந்தை என தெரியாமல் பாரதி பழகுகிறான். பின்னர் அடுத்தடுத்த எபிசோடுகளில் நடைபெற்ற திருப்பங்களில் இரண்டு குழந்தைகளும் கண்ணம்மாவுக்கு பிறந்த தன் குழந்தைகள் என நம்புகிறான். ஆனாலும் அவனுடைய மனதில் தனக்கு பிறந்த குழந்தைகளா? என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்கனவே டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துவிட்டதால், பாரதிக்கும் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தால் மிகப்பெரிய குழப்பம் முடிவுக்கு வரும். இந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு தடையாக வில்லி வெண்பா பக்காவாக ஸ்கெட்ச் போட்டுக்கொண்டிருக்கிறாள்.

விறுவிறுப்பாக கதை சென்றாலும் பாரதிக்கு சீக்கிரம் டி.என்.ஏ டெஸ்ட் எடுங்கப்பா என்ற அளவுக்கு ரசிகர்கள் சென்றுவிட்டனர். ஒருவேளை பாரதிக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து உண்மைகள் தெரியவந்தால், அவர் கண்ணம்மாவுடன் சேர்ந்துவிடுவார். அத்துடன் சீரியலும் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. இந்த தகவலை ஏற்கனவே ஒரு பேட்டியில் பாரதி கண்ணம்மா இயக்குநர் பிரவீன் பென்னட்டும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய வெண்பா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ப்ரீனா, பாரதி கண்ணம்மா முடியப்போகிறதா? பாரதிக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கப்படுமா? என்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

Photos : கடற்கரையில் சிலை போல் நிற்கும் ஷிவானி நாராயணன் -போட்டோஸ்

அதில் சீரியல் முடிவடைய வாய்ப்பில்லை எனக் கூறிய ப்ரீனா, டி.என்.ஏ டெஸ்ட் குறித்த கேள்விக்கு வெய்ட் அன்ட் வாட்ச் என்ற டிவிஸ்டை வைத்தார். அவரின் பதிலால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இன்ஸ்டாகிராமிலேயே சீரியலின் டிவிஸ்டைக் கேட்டால் சொல்வார்களா என்ன?. இதனிடையே, இணையத்திலும் பாரதி கண்ணம்மா சீரியல் பற்றிய மீம்ஸ்கள் மீண்டும் ஒருமுறை றெக்கை கட்டி பறக்கத் தொடங்கியுள்ளன. அதில், பாரதிக்கு எப்போ டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கப்போறாங்க? என்ற கேள்வியை வைத்து கிண்டல் அடித்து வருகின்றனர். ஏற்கனவே பாரதியுடன் சண்டைப்போட்டுக்கொண்டு கண்ணம்மா பல நாட்களாக நடந்து செல்லும் காட்சிகள் மீம் கன்டென்டாக மாறிய நிலையில் இப்போது பாரதிக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கும் கன்டென்ட் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கிடைத்துள்ளது.

 
Published by:Tamilmalar Natarajan
First published: