Home /News /entertainment /

வெளிமாநில கதாநாயகிகளுக்கு என்ன திறமை உள்ளது? நடிகையின் கேள்விக்கு சேரன் பதில்!

வெளிமாநில கதாநாயகிகளுக்கு என்ன திறமை உள்ளது? நடிகையின் கேள்விக்கு சேரன் பதில்!

இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன்

வெளிமாநிலங்களில் இருந்து வரும் கதாநாயகிகள் மீது நம்பிக்கை வைத்து ஒரு கதாபாத்திரத்தைக் கொடுக்கும்போது ஏன் என்னைப் போன்ற தமிழ்ப்பெண்களுக்கு தரக்கூடாது? - நடிகை ஸ்ரீபிரியங்கா

  • News18
  • Last Updated :
    வெளிமாநில கதாநாயகிகளுக்கு என்ன திறமை உள்ளது என்று கேள்வி எழுப்பிய நடிகை ஸ்ரீ பிரியங்காவுக்கு இயக்குநர் சேரன் பதிலளித்துள்ளார்.

    தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அறிமுகமாகும் படம் மிக மிக அவசரம். இந்தப் படத்தில் பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். ஹரீஷ் குமார், சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இஷான் தேவ் இசையமைத்துள்ளார்.

    படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய  ஸ்ரீபிரியங்கா, “நிறைய போராட்டங்களுக்குப் பிறகு மிக மிக அவசரம் படத்தின் மூலம் தனி ஒரு பெண்ணாக நான் நிற்கிறேன். அதற்கு இயக்குநர் சுரேஷ் காமாட்சிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என்னிடம் நிறையபேர் ஏன் பெரிய படங்களில் நடிப்பதில்லை என்று கேட்கிறார்கள். இங்கே நிறைய பேருக்கு நான் கதாநாயகியாக ஒரு முழுப்படத்தையும் தாங்கிப் பிடிப்பேனா என்ற சந்தேகம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் தமிழ்ப் பெண்ணான எனக்கு ஒரு இடம் இருக்கிறது என்பதை இந்தப் படம் சொல்லும்.



    வெளிமாநிலங்களில் இருந்து வரும் கதாநாயகிகளுக்கு என்ன திறமை உள்ளது எனத் தெரியவில்லை. அவர்களுக்கு திறமை உண்டு என்று நம்பிக்கை வைத்து ஒரு கதாபாத்திரத்தைக் கொடுக்கும்போது ஏன் என்னைப் போன்ற தமிழ்ப்பெண்களுக்கு தரக்கூடாது? தமிழ்ப் பெண்களாலும் பெரிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முடியும் என்று இங்குள்ள இயக்குநர்கள் நம்ப வேண்டும். அப்போதுதான் எங்களைப் போன்றவர்களாலும் மேலே வர முடியும்” என்றார்.

    இதற்கு பதிலளித்துப் பேசிய இயக்குநர் சேரன், “ஸ்ரீ பிரியங்கா தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தும்போது என்னைத்தான் சொல்கிறார் என்று நினைத்துக் கொள்வேன். காரணம் கேரளாவில் இருந்து பல நடிகைகளை என் படங்களில் நடிக்க வைத்துள்ளேன்.

    நாங்களும் பொக்கிஷம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து ஆகிய படங்களுக்குத் தமிழ்ப் பெண் தான் வேண்டும் என்று தேடி அலைந்தோம். எங்களுக்கு நல்ல முகமும், திறமையும் கொண்டவர்கள் கிடைக்கவில்லை. தமிழ்ப்பெண்களை நிராகரிக்க வேண்டும் என்பதில்லை. பத்மப்பிரியா தமிழ் பெண் தான். மலையாளப் பெண் கிடையாது. தமிழ்நாட்டில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நடிப்புத் திறமையுள்ள பெண்கள் நடிக்க ஆர்வமாக முன் வராதது தான் காரணம். குறும்படம், ஆல்பத்தில் நடிக்கும் பெண்கள் கூட சினிமாவில் நடிக்க தயங்குகிறார்கள்” என்று கூறினார்.

    கள்ளக்காதலுக்காக குழந்தையை விஷ ஊசி போட்டுக் கொன்ற தாய் - வீடியோ

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Director cheran

    அடுத்த செய்தி