• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மசாலா பிஸினஸை மேலும் டெவலப் செய்ய பாக்கியலட்சுமி எடுக்க போகும் புதிய முடிவு!

மசாலா பிஸினஸை மேலும் டெவலப் செய்ய பாக்கியலட்சுமி எடுக்க போகும் புதிய முடிவு!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

மசாலா பிஸினஸை மேலும் டெவலப் செய்ய ஸ்கூட்டி வாங்கும் முயற்சியில் இறங்கும் பாக்கியலட்சுமி.என்ன ரியாக்ட் செய்ய போகிறார் கோபி ?

  • Share this:
விஜய் டிவியில் ப்ரைம் டைமிங் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த முக்கியமான சீரியலாக இருந்து வருகிறது. இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நடிகை சுசித்ரா ஷெட்டி, பாக்கியலட்சுமியாக நடித்து வருகிறார். இவரது கணவர் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகிறார். இந்த தம்பதியருக்கு செழியன், எழில், இனியா என்ற 3 பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்களுடன் கோபியின் தாய் மற்றும் தந்தை அனைவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இதில் செழியன் ஜெனியை காதல் திருமணம் செய்து கொண்டு கூட்டு குடும்பத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் தனது குடும்பத்தினருக்கே தெரியாமல் புது பிளாட் ஒன்றை புக் செய்ய நினைக்கிறான் செழியன். ஆனால் இந்த தகவலை அவனின் மனைவி ஜெனி எப்படியோ புகுந்த வீட்டாரிடம் உளறி விடுகிறார். இதனால் பாக்கியலட்சுமி வீட்டில் தொடர்ந்து பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தன் தேவை மற்றும் தனது தாயின் தேவைகளுக்காக கணவனை சார்ந்து இருக்காமல் வீட்டில் வேலை பார்க்கும் செல்வி மற்றும் மருமகள் ஜெனியின் உதவியுடன் மசாலா கம்பெனி ஒன்றை வீட்டிலேயே நடத்தி வரும் பாக்கியாவிற்கு மெல்ல மெல்ல ஆர்டர்கள் இப்போது தான் வர துவங்குகின்றன.

இது குறித்து தனது மாமனார், மாமியாரிடம் கூறும் பாக்கியா ஒரே ஏரியாவில் இருந்து ஆர்டர் கிடைத்தால் ஆட்டோவில் போய் டெலிவரி செய்து வரலாம். ஆனால் வேறு வேறு ஏரியாவில் இருந்து ஆர்டர் வருவதால் ஆட்டோவில் போய் டெலிவரி செய்வது கட்டுபடியாகாது என்று கவலைப்படுகிறாள். பேசாம நீ ஒரு ஸ்கூட்டர் வாங்கிடேன் மா, உனக்கு டெலிவரி செய்ய தொந்தரவு இல்லாமல் பிசினஸ் நல்லபடியாக நடக்குமே என்று பாக்கியாவின் மாமனார் ஐடியா கொடுக்கிறார். ஆட்டோவிற்கு செலவழிக்கும் காசை லோனில் ஸ்கூட்டர் வாங்க பயன்படுத்தலாம் என்று செல்வியிடம் விவாதிக்கிறாள் பாக்கியா.

இந்நிலையில் இரவு ஒளிபரப்பாக உள்ள இன்றைய எபிசோடை ஹாட்ஸ்டாரில் காலை 6 மணிக்கு விஐபி யூசர்கள் பார்க்க முடியும். அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா பைக் வாங்கும் நினைப்போடு தூங்க செல்கிறாள். இதன் காரணமாக தான் பைக் ஓட்டுவது போல கனவு காணும் பாக்கியா உற்சாகத்தில் மகள் இனியாவை எழுப்பி விட்டு விடுகிறாள். இனியாவோ ஒன்றரை மணி ஆச்சு தூங்குமா என்று சலித்து கொண்டு தனது தூக்கத்தை தொடர்கிறாள். காலை எழுந்ததும் ராதிகாவின் வீட்டிற்கு இனிப்பு பண்டங்களை செய்து எடுத்து செல்கிறாள் பாக்கியா.

Also Read : எங்க "அபி டெய்லர்" சீரியலுக்கு சப்போர்ட் பண்ணுங்க.. இன்ஸ்டாவில் பதிவிட்ட மதன் பாண்டியன்!

பின்னர் பாக்கியாவிடம் பேசி கொண்டிருக்கும் ராதிகா, ஏன் இவ்வளவு தூரம் நடந்து வந்தீங்க. நீங்க வண்டி ஒன்னு வாங்கிகிட்டா உங்க பிஸினஸுக்கும் அது ரொம்ப உதவியா இருக்குமே என்று ராதிகாவின் மாமனாரை போலவே ஐடியா கொடுக்கிறாள். இதனால் பாக்கியாவிற்கு ஸ்கூட்டர் வாங்கும் ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது. ஆனால் டிரைவிங் தெரியாதே என்று நினைத்து சற்று குழம்புகிறள். ஸ்கூட்டர் பற்றியும், டிரைவிங் பற்றியும் யோசித்து கொண்டே செல்லும் போது வழியில் இருக்கும் டிரைவிங் ஸ்கூலை பார்த்து உள்ளே போகலாமா, வேண்டாமா என்று தயங்கி நிற்கிறாள். இப்படி யோசித்து யோசித்து தான் நிறைய விஷயங்களை செய்யாமலேயே பின்வாங்கி விடுகிறோம் என நினைத்து, டிரைவிங் ஸ்கூலுக்குள் சென்று தனக்கு தேவையான விவரங்களை விசாரிக்கிறார். கண்டிப்பாக டிரைவிங் கிளாஸ் சேர வேண்டும் என்ற முடிவுடன் வீடு திரும்புகிறாள் பாக்கியா. எதற்கெடுத்தாலும் மனைவி பாக்கியாவை கரித்து கொட்டும் கோபி, அவள் டிரைவிங் கிளாஸில் சேரப்போகும் முடிவை கேட்டு எப்படி ரியாக்ட் செய்ய போகிறார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: