• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bharathi Kannamma: போலீஸிடம் சிக்கிய வெண்பா? பாரதி கண்ணம்மா சீரியலில் வெளியான அடுத்த ட்விஸ்டு!

Bharathi Kannamma: போலீஸிடம் சிக்கிய வெண்பா? பாரதி கண்ணம்மா சீரியலில் வெளியான அடுத்த ட்விஸ்டு!

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா வில்லி வெண்பா வெளியிட்ட வீடியோ மூலம் அவர் போலீஸிடம் சிக்கிவிட்டாரா? என கேள்வி எழுந்துள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் ட்விஸ்டு மேல் டிவிஸ்டாக நகர்ந்து கொண்டிருக்கிறது. சொந்த மகளை வளர்ப்பு மகளாக நினைத்துக் கொண்டிருக்கும் பாரதி, ஹேமாவை அமெரிக்கா கூட்டிச் செல்ல திட்டமிடுகிறான். குடும்ப உறுப்பினர்களிம் இதனை தெரிவிக்கும்போது அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனாலும் தனது முடிவில் விடாப்பிடியாக இருக்கிறான் பாரதி. குழந்தை ஹேமாவுக்கும் அமெரிக்கா செல்வதில் விருப்பமில்லை. ஆனால், பாரதியின் கட்டாயத்தின்பேரில் அமெரிக்கா புறப்படுகின்றனர்.

விமான நிலையத்துக்கு செல்லும் வழியில், ஹேமாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கிறது. காரில் சென்று கொண்டிருக்கும்போது ஹேமாவுக்கு வலிப்பு ஏற்படுகிறது. அப்போது அவர்களுடன் கூடவே இருக்கும் மருத்துவ தோழி பிரியா, ஹேமாவின் பல்ஸை செக் செய்து, வேகமாக குறைந்து வருவதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறுகிறார். பதட்டத்தில் பாரதி இருக்கும் நிலையில் , காரின் பின்னால் வந்த பாரதியின் தாய் சவுந்தர்யா, ஹேமாவின் நிலையைப் பார்த்து கடுமையாக கோபமடைகிறார்.

Photos : சன் டிவி சீரியல் நடிகை ரேஷ்மாவின் ஹாட் போட்டோஸ்

பேத்தி எதாவது ஆச்சுன்னா? உன்ன என்ன செய்கிறேன் என பார் என தன் மகனையே மிரட்டுகிறார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹேமாகவுக்கு உடனடியாக அவசர சிகிச்சை கொடுக்கப்படுகிறது. பின்னர், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வரும் மருத்துவர் பிரியா, ஹேமாவைக் காப்பாற்ற வேண்டும் என்றால் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது என பாரதியிடம் கூறுகிறார். இதனைக் கேட்ட பாரதி, என்ன செய்ய வேண்டும் என கூறு என கேட்கும்போது, 'சமையல் அம்மாவை அழைத்து வரவேண்டும்' என பிரியா தெரிவிக்கிறார்.



அதற்கு பாரதி தன் தாய் சவுந்தர்யாவை பார்க்கும்போது அவர் மறுப்பு தெரிவித்து, நீயே சென்று அழைத்து வா என கூறிவிடுகிறார். இதனால், பாரதியே கண்ணம்மாவை நேரில் அழைத்து வர செல்கிறான்.

Also Read: சென்னையில் படமாகும் கார்த்தியின் சர்தார் சண்டைக்காட்சி..

அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கும் நிலையில், சீரியலின் வில்லியான வெண்பா என்கிற ஃபரீனா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அடுத்து என்ன நடக்கப்போகுது? என்ற கேள்வியுடன் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.


போலீஸ் வாகனம் பின்னாடி இருப்பதால், வெண்பா போலீஸிடம் மாட்டிக் கொண்டாளா? அல்லது இதில் வேறு ஏதேனும் டிவிஸ்டு இருக்கிறதா? ரசிகர்கள் யூகங்களில் மிதக்கத் தொடங்கியுள்ளனர். கண்ணம்மாவை பாரதி நேரில் பார்க்கும்போது என்ன நடக்கும்? வில்லி வெண்பாவின் ரோல் என்னவாக இருக்கப்போகிறது என எதிர்பார்ப்புகள் இருப்பதால், அடுத்த எபிசோட்டை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: