Home /News /entertainment /

பிக்பாஸ் வீட்டில் நடந்தது இதுதான்... மதுமிதாவின் முதல்பேட்டி

பிக்பாஸ் வீட்டில் நடந்தது இதுதான்... மதுமிதாவின் முதல்பேட்டி

இதையடுத்து விஜய் டிவி நிர்வாகம் நடிகை மதுமிதா சம்பள பாக்கியை கேட்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதாக கடந்த மாதம் ஆகஸ்ட் 21-ம் தேதி போலீசில் புகாரளித்தது.

இதையடுத்து விஜய் டிவி நிர்வாகம் நடிகை மதுமிதா சம்பள பாக்கியை கேட்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதாக கடந்த மாதம் ஆகஸ்ட் 21-ம் தேதி போலீசில் புகாரளித்தது.

 • News18
 • Last Updated :
  பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து நடிகை மதுமிதா மனம் திறந்துள்ளார்.

  100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த வாரம் நடந்த டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

  ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்று அறிவித்தார்.

  மதுமிதா


  இந்நிலையில் நடிகை மதுமிதா தனியார் இணையதளம் ஒன்றுக்கு பிக்பாஸ் வீட்டில் நடந்தது குறித்து நடிகை மதுமிதா மனம் திறந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்ததால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. 3-வது முறை வாய்ப்பு வந்த போது இந்தமுறை வாய்ப்பை இழக்க வேண்டாம் என்று நினைத்து உள்ளே சென்றேன். பிக்பாஸ் வீட்டில் எனக்கு முதன்முதலாக பிரச்னை ஏற்பட்டது ஷெரினுடன் தான்.

  தமிழ் ரசிகர்களுக்காக தான் நிக்ழ்ச்சி நடக்கிறது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் அபிராமி, ஷெரீன் ஆகிய யாருமே தமிழ் பேசவில்லை. உடைகளும் நமது கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி அணியவில்லை. இதைதான் நான் கேட்டேன். ஆனால் அதை எனக்கே திரும்பிவிட்டனர். கவின் யாரையும் மதிக்கமாட்டார். பெண்களுடன் மட்டும் தான் அதிக நேரம் செலவழிப்பார். ஒரு சகோதரியாக இருந்து அவருக்கு புத்தி சொன்னேன். ஆனால் அதையும் அவர் கேட்கவே இல்லை.

  கமல்ஹாசன் - மதுமிதா


  எனது உயரத்தை வைத்து குள்ளச்சி என்று பெயர் வைத்தது கவின் தான். எனக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே நியாயமான மனிதர் சேரன் மட்டும் தான். லாஸ்லியாவை அவர் மகளாக நினைக்கிறார். ஆனால் கவினுடன் லாஸ்லியா சேர்ந்த பிறகு மாறிவிட்டார்.

  பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடந்த 55 நாட்களாக அப்படித் தான் நடக்கிறது. அபிராமி சிறைக்குச் சென்ற விவகாரத்தில் இதுதான் நடந்தது. அதைத் தட்டிக்கேட்டதற்காக அனைவரும் என்னிடம் சண்டைக்கு வந்தனர்.

  கடந்த வியாழன் அன்று நடந்த ஹலோ ஆப் டாஸ்க்கில் வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் தான் போல. நமக்கு மழையே கொடுப்பதில்லை என்று எனது கருத்தைக் கூறினேன். உடனே இதற்கு நடிகை ஷெரீன் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவைச் சேர்ந்த நான் இங்கு இருக்கும்போது நீ எப்படி இவ்வாறு கூறலாம் என்று கூறி கத்தினார்.

  ஹலோ ஆப்-ல் என்னுடைய கருத்தை நான் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறினேன். ஆனால் அதை ஒப்புக்கொள்ளவில்லை. எப்போது பார்த்தாலும் நீ என்ன தமிழ்ப் பெண் என்று பேசுகிறாய். தமிழக மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா என்று கேட்டனர். அதனால் தான் நான் எனது கையை அறுத்துக் கொண்டு எனது வாதத்தை நிரூபித்தேன். நான் கையை அறுத்துக் கொண்ட போது எனக்கு சேரனும், கஸ்தூரியும் மட்டுமே ஆதரவாக இருந்தனர். மற்றவர்கள் யாரும் என்னிடம் வரவில்லை. இனிமேல் பிக்பாஸ் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன்” என்று மதுமிதா கூறியுள்ளார்.

  வீடியோ பார்க்க: தனுஷுடன் மோதலா? மனம் திறக்கும் ஜி.வி.பிரகாஷ்

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Bigg Boss Tamil 3

  அடுத்த செய்தி