Home /News /entertainment /

யாஷிகாவுக்கு பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?: வெளியான அதிர்ச்சி வீடியோ

யாஷிகாவுக்கு பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?: வெளியான அதிர்ச்சி வீடியோ

பிக்பாஸ்

பிக்பாஸ்

  • News18
  • Last Updated :
    பிக்பாஸ் வீட்டில் யாஷிகா மயக்கமடைந்து கீழே விழும் காட்சிகளை நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் சக போட்டியாளர்கள் பரபரப்படையும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

    கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ்-2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களில் தற்போது வீட்டில் 7 பேரே எஞ்சியுள்ளனர்.  இவர்களுடன் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளரை தேர்ந்தெடுத்து அவருக்கு ஃபைனல் செல்வதற்கான டிக்கெட் ஒன்றையும் நிகழ்ச்சிக் குழுவினர் தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்காக போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கின்படி ஒவொரு போட்டியாளர்களுக்கும் தண்ணீர் நிரம்பியிருக்கும் குவளை ஒன்று கொடுக்கப்பட்டது. தண்ணீரை கீழே கொட்டாமல் கொடுக்கப்பட்ட இடத்தை சுற்றிவர வேண்டும் . இந்த டாஸ்க்கில் பங்குபெற்ற போட்டியாளர்கள் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்திருப்பதாக தெரிய வருகிறது.

    இதனால் இந்த டாஸ்க்கில் பங்குபெற்ற யாஷிகா மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். பதறிய சக போட்டியாளர்கள் அவருக்கு முதலுவி சிகிச்சை அளிக்கின்றனர். பின்னர் யாஷிகாவை கன்பெஷன் அறைக்கு பிக்பாஸ் அழைக்கிறார். சகபோட்டியாளர்கள் அவரை அங்கு அழைத்து செல்கின்றனர். இந்த வீடியோ பார்வையாளர்களிடயே எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Aarav, Big boss accident, Bigg Boss, Mumtaj, Yashika

    அடுத்த செய்தி