'வீ சப்போர்ட் ரஜினி' அமெரிக்கவாழ் தமிழர்களின் கோரிக்கைக்கு ஆதரவளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த்

'வீ சப்போர்ட் ரஜினி' அமெரிக்கவாழ் தமிழர்களின் கோரிக்கைக்கு ஆதரவளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த்

மகளுடன் நடிகர் ரஜினிகாந்த்

ரஜினியின் அரசியல் வருகை குறித்த அமெரிக்கவாழ் தமிழர்களின் கோரிக்கைக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த ஆதரவு தெரிவித்துள்ளார்.

 • Share this:
  அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் 'வீ சப்போர்ட் ரஜினி' என்ற அமைப்பின் மூலம் ரஜினியின் அரசியல் வருகையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

  'ரஜினியின் மாற்று அரசியல் தமிழ்நாட்டுக்கு தேவை' என்ற கோரிக்கை அடங்கிய வீடியோ ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

   

      

  அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சௌந்தர்யா ரஜினிகாந்த், தம்ஸ் அப், ஸ்மைலி மற்றும் ரஜினியின் பாபா முத்திரை ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ரஜினியின் அரசியல் வருகையை சௌந்தர்யா ஆதரித்துள்ளதாக தெரிகிறது.

   

      

  முன்னதாக கொரோனா பரவல் காரணமாக தற்போது கட்சி ஆரம்பிக்கவில்லை என நடிகர் ரஜினி கூறியதைப் போல, அவர் பெயரில் சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்று உலா வந்தது.  அதனை மறுத்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், "என் அறிக்கை போல சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் வலம் வருகிறது.

   

      

  அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வெளிவந்திருக்கும் எனது உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் அனைத்தும் உண்மை.

  இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டினை மக்களுக்கு அறிவிப்பேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.
  Published by:Sankaravadivoo G
  First published: