சினிமாவில் நடிக்கும் பிரபல சித்த மருத்துவர் வீரபாபு..!

வீரபாபு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் பிரபலமான வீரபாபு தற்போது தனது சொந்த இயக்கத்தில் படம் நடிக்கவுள்ளார்.

  • Share this:
    கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த சித்த மருத்துவர் ஒரு படத்தை இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்கு சித்த வைத்திய பாணியில் முடக்கருத்தான் என பெயர் வைத்துள்ளார்.

    கொரோனா முதல் அலையில் சென்னை சாலிகிராமத்தில் மருத்துவமனை நடத்திவந்த சித்த மருத்துவர் வீரபாபு பிரபலமடைந்தார்சித்த மருத்துவத்தில் கொரோனா நோயாளிகளை இவர் குணப்படுத்தியதால் தமிழக அளவில் இவரது பெயர் பரவியது. அவரது சிகிச்சையில் யாரும் மரணமடையவில்லை என்பதும் ஒரு காரணம். சுமார் ஆறாயிரம் பேர் அவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.

    இரண்டாவது அலை முதல் அலையைவிட தீவிரமாக இருந்ததாலும், ஆக்சிஜன் பெரும்பாலான நோயாளிகளுக்கு தேவைப்பட்டதாலும் வீரபாபுவின் சித்த மருத்துவமனையை நோயாளிகள் அதிகம் நாடவில்லை. அலோபதி மருத்துவம் பக்கம் திரும்பினர். தற்போது அவர் ஒரு திரைப்படத்தை இயக்கி, நடிக்கிறார். படத்துக்கு முடக்கருத்தான் என பெயரிட்டுள்ளார்.

    AlsoRead : ஆடி மாத சென்டிமெண்ட் - ட்ராபிக் ஜாமான திரையுலகம்

    இந்தப் படத்தை வயல் மூவிஸ் தயாரிக்க, அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். ஒருகாலத்தில் வெற்றிக் கூட்டணியாக இருந்த இசையமைப்பாளர் சிற்பி - பாடலாசிரியர் பழனிபாரதி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: