சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்ற ‘வெல்கம் பேக் சேரன்’ என்ற நிகழ்வில் இயக்குநர் சேரனுக்கு கமலா திரையரங்கம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடினர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த சேரன், “நான் திரைப்படம் காண தான் திரையரங்கம் வந்தேன் ஆனால் இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்குபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் பற்றியும் நன்றாக தெரியும். நான் இயக்குநர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதன் என்பதை மக்களுக்கு புரிய வைத்துவிட்டேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக காரணமாக இருந்தவர் நடிகர் விஜய்சேதுபதி தான். அவரை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ள நிலையில் என்னிடம் தொலைப்பேசியில் அழைத்து நீங்கள் வெற்றி இயக்குநர் என்பது இப்பொழுது இருக்கும் இளம் தலைமுறைகளுக்கு தெரியாது அவர்கள் மனதில் எல்லாம் இடம் பிடிக்க வேண்டும் என்றால் எல்லோர் இல்லத்திலும் சேரன் எளிதாக நுழைய வேண்டும். அதற்கு நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டும் என்று தெரிவித்தார்.
அவர் ஆலோசனையின் படி தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சில் பங்கு பெற்றேன். கூடிய விரையில் விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்குவேன். கமல்ஹாசன் சம்மதித்தால் தேவர் மகன் இரண்டாம் பாகம் எடுப்பேன். இதை கமல்ஹாசனிடமும் தெரிவித்துவிட்டேன்” என்றார்.
வீடியோ பார்க்க: என்ன சொல்றாங்க நம்ம பிகில் புள்ளிங்கோ?
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.