சன் டிவியில் ’96’ படம் ஒளிபரப்பாவதை தடுத்து நிறுத்த வேண்டும் - த்ரிஷா அதிரடி

சன் டிவியில் 96 பட ப்ரீமியர் ஒளிபரப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: November 3, 2018, 3:04 PM IST
சன் டிவியில் ’96’ படம் ஒளிபரப்பாவதை தடுத்து நிறுத்த வேண்டும் - த்ரிஷா அதிரடி
96 படத்தில் திரிஷா, விஜய் சேதுபதி
Web Desk | news18
Updated: November 3, 2018, 3:04 PM IST
சன் டிவியில் 96 பட ப்ரீமியர் ஒளிபரப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள படம் 96. சமீபத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தற்போது வரை சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு சன் டிவியில் இந்தப் படம் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தகவல் பலரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது. மேலும் 96 படத்தை திரையில் பார்க்க முடியாதவர்களுக்கும், மீண்டும் பார்க்கத் துடிப்பவர்களுக்கும் , சர்கார் டிக்கெட் கிடைக்காமல் இருப்பவர்களுக்கும் இந்த தகவல் ஆறுதலை அளிப்பதாகவும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Loading...
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை த்ரிஷா, 96 படம் வெளியாகி இது 5-வது வாரம். இப்போதும் அனைத்து திரையரங்குகளிலும் 80% கூட்டம் வருகிறது. இந்நிலையில் 96 படத்தை இவ்வளவு சீக்கிரம் டிவியில் ஒளிபரப்பாவது நியாயமில்லை என படக்குழுவினர் கருதுகிறோம். 96 பட ஒளிபரப்பை பொங்கலுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என சன் டிவியை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் சன் டிவியின் 96 பட ப்ரீமியர் ஒளிபரப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற ஹேஸ்டேக்குடன் இதை பகிர்ந்துள்ளார்.

First published: November 3, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்