• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Abi Tailor: திருமணம் எப்போது? மதன் - ரேஷ்மா பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய தகவல்!

Abi Tailor: திருமணம் எப்போது? மதன் - ரேஷ்மா பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய தகவல்!

மதன் - ரேஷ்மா

மதன் - ரேஷ்மா

நடிப்பில் கவனம் செலுத்த வேண்டிய இடங்களை கூறும்போது, சிறப்பான நடிப்புக்கு பாராட்டவும் தவறமாட்டோம். நான் அவரை பாராட்டுவேன், அவர் என்னை பாராட்டுவார்" என ரேஷ்மா தெரிவித்தார்.

  • Share this:
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ‘அபி டெயலர்’ சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. இதில் காதலர்களான ரேஷ்மா முரளிதரன் - மதன் பாண்டியன், ஜோடியாக நடித்து வருகின்றனர். பூவே பூச்சூடவா தொடரில் ஏற்கனவே இருவரும் ஒன்றாக நடித்திருந்தாலும், காதலர்களாக முதன்முறையாக இந்த சீரியலில் நடிக்க உள்ளனர். இது குறித்து பேசிய அவர்கள், அபி டெய்லரில் நடிப்பது முதல் தங்களது சொந்த வாழ்க்கை வரை என அனைத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

நடிகர் மதன் பாண்டியன் பேசும்போது, "அபி டெயலர் சீரியல் வழக்கமான சீரியல் கதைக்களமாக இல்லாமல் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். கதைக்களம் மிகவும் புதிது, இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றார் போல் இருக்கும். என்னுடைய கதாப்பாத்திரம் மார்டன் மற்றும் ஸ்டைலிஷ் பையனாக வலம் வருவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரேஷ்மா பேசும்போது, "இந்த சீரியலில் அபி டெய்லராக நடிக்கிறேன். இந்த கேரக்டர் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தது. ஏனென்றால், என் அம்மாவும் டெய்லர். இன்னொரு விஷயம் மதனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி. பூவே பூச்சூடவா சீரியலில் இருவரும் நடித்திருந்தாலும், எதிரெதிர் கதாப்பாத்திரங்களில் நாங்கள் நடிக்கவில்லை. ஜோடியாக இந்த தொடரில் நடிப்பது என்பது புதிய அனுபவம்.

இந்த வாய்ப்பு எங்களைத் தேடி வரும்போது மிஸ் பண்ணக்கூடாது என நினைத்து ஓகே சொல்லிவிட்டோம்" என தெரிவித்தார். ஒன்றாக நடிப்பது குறித்து பேசும்போது, வேலையில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. போட்டி போட்டுக்கொண்டு நடிப்போம் எனக் கூறியுள்ளனர். நடிப்பு குறித்து பேசிய மதன், " நாங்கள் நண்பர்களாக இருந்தாலும், வேலை என வந்தாலும் போட்டியாளர்கள் தான். முழு திறமையை கொடுத்து நடிப்போம். அதேநேரத்தில் தங்களின் அபிப்பிராயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வோம்.

Also read... விரைவில் வருகிறது புதிய பிரமாண்டமான ரியாலிட்டி ஷோ "Survivor" - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

நடிப்பில் கவனம் செலுத்த வேண்டிய இடங்களை கூறும்போது, சிறப்பான நடிப்புக்கு பாராட்டவும் தவறமாட்டோம். நான் அவரை பாராட்டுவேன், அவர் என்னை பாராட்டுவார்" எனத் தெரிவித்தார்.
தங்களுடன் நடிக்கும் சக நடிகர்கள் குறித்தும் ரேஷ்மா - மதன் பாண்டியன் பேசியுள்ளனர். " படவா என்னுடைய அப்பாவாக நடிக்கிறார். ஒவ்வொரு நாளும் அவரின் நடிப்பில் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன், சோனா என்னுடைய அம்மாவாக நடிக்கிறார்" என மதன் கூறியுள்ளார். ரேஷ்மா பேசும்போது, " நடிகை சோனம் மேடம் கேரக்டர் வித்தியாசமானது. இதற்கு முன்பு இப்படியொரு சோனத்தை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்.

அவர் எப்போதும் ஜாலியாக செட்டில் இருப்பார். மாமனாராக நடிக்கும் படவா கோபி சாருடன் விரைவில் நடிக்க இருக்கிறேன். அந்த நாளை எதிர்பார்க்கிறேன். அபி டெய்லரில் ரியல் லைஃப் சூழ்நிலைகள் அதிகமாக இருக்கும். மிகைபடுத்தும் காட்சிகள், குளோஸ் அப் ஷாட்ஸ் எல்லாம் இருக்காது" என கூறினார். காதல் வாழ்க்கை குறித்து பேசிய அவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் தங்களுடைய ரிலேஷன்ஷிப்பை வெளிப்படையாக கூறாதபோது, நீங்கள் எப்படி? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளனர்.

அதில்,வேலைக்காக தங்களுடைய காதல் வாழ்க்கையை ஏன் மறைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர். மேலும், தங்களுடைய விருப்பங்களை மறைப்பதில் தவறு ஒன்றும் இல்லை எனக் கூறிய ரேஷ்மா - மதன் பாண்டியன் இணை, எங்களுடைய வாழ்க்கையை சமூகவலைதள பக்கங்கங்களில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம் எனத் தெரிவித்துள்ளனர். திருமணம் குறித்து பேசும்போது, கொரோனா நெருக்கடிகள் குறைந்ததும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ திருமணம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: