ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வதந்திகளை நம்பாதீர்கள்... தமிழ் ராக்கர்ஸ் அதிரடி!

வதந்திகளை நம்பாதீர்கள்... தமிழ் ராக்கர்ஸ் அதிரடி!

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

எங்கள் பெயரில் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் விளக்கமளித்திருக்கிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  எங்கள் பெயரில் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் விளக்கமளித்திருக்கிறது.

  திரைக்கு வரும் திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வரும் இணையதளம் தமிழ் ராக்கர்ஸ். புதிய படங்களை வெளியான முதல் நாளன்றே இணையத்தில் வெளியிட்டு வரும் இந்த இணைய தளத்தை முடக்கவோ, பின்னணியில் உள்ளவர்களை பிடிக்கவோ அரசு மற்றும் திரைத்துறையினரால் முடியவில்லை.

  சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான சர்கார் படத்தை வெளியான முதல் நாளன்றே இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் செயல்படும் ட்விட்டர் தளத்தில் சவால் விடுக்கப்பட்டிருந்தது. அதுபோலவே ரிலீஸான அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டது. இது படக்குழுவினர் உள்ளிட்ட திரைத்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

  அந்த அதிர்ச்சி அடங்கும் முன்பே ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று அதே ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

  தற்போது எங்கள் பெயரில் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் விளக்கம் அளித்துள்ளது.

  இதுதொடர்பாக தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாங்கள் இல்லை. எங்களுக்கு அங்கு கணக்குகள் கிடையாது. சமூக வலைதளங்களில் எங்களின் பெயரைப் பயன்படுத்தி யாராவது பதிவிட்டால், அவை போலியானவை. அதுபோன்ற ஐ.டி.க்களையும், அவர்கள் பரப்பும் வதந்திகளையும் நம்பாதீர்கள் ” என்று கூறப்பட்டுள்ளது.

  வீடியோ பார்க்க: தீபாவளிக்காக ரூ.300 கடன் வாங்கிய கூலி தொழிலாளி அடித்து கொலை

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Tamil rockers