முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’காப்பான்’ படப் பாடலில் தண்ணீர் பிரச்னை குறித்த வரிகள்!

’காப்பான்’ படப் பாடலில் தண்ணீர் பிரச்னை குறித்த வரிகள்!

காப்பான் படப் பாடல்

காப்பான் படப் பாடல்

காப்பன் படத்தில்அழிந்துவரும் விவசாயம், தண்ணீர் தட்டுப்பாடு குறித்த வரிகளும், "ஒற்றுமையா பொங்கி எழுந்தா ஓடிவரும் காவிரி" போன்ற வரிகளும் இடம்பெற்றுள்ளன.

  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் சூர்யாவின் காப்பான் படப் பாடலில் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் காவிரி பிரச்னை குறித்த வரிகள் இடம்பெற்றுள்ளன.

சூர்யா, இயக்குநர் கே.வி.ஆனந்த் 3-வது முறையாக காப்பான் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின், சிறுக்கி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், அழிந்துவரும் விவசாயம், தண்ணீர் தட்டுப்பாடு குறித்த வரிகளும், "ஒற்றுமையா பொங்கி எழுந்தா ஓடிவரும் காவிரி" போன்ற வரிகளும் இடம்பெற்றுள்ளன.

தண்ணீர் தட்டுப்பாடு குறித்த படங்கள், பாடல்கள் மூலம் மக்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் திரைப்படங்கள் எடுக்கப்படுவது மக்களிடையேயும் வரவேற்பை பெறுகிறது.

Also watch: கணவரை காணவில்லை: விளம்பரத்தால் சிக்கிய பாபநாசம் பட நடிகை!

First published:

Tags: Kaappaan, Surya 37