முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மோடி ஸ்டைலில் #வாட்ச்மேன் பட விளம்பரம்... வைரலாகும் போஸ்டர்!

மோடி ஸ்டைலில் #வாட்ச்மேன் பட விளம்பரம்... வைரலாகும் போஸ்டர்!

வாட்ச்மேன் போஸ்டர்

வாட்ச்மேன் போஸ்டர்

நடிகர் ஜி.வி.பிரகாஷ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வாட்ச்மேன். இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பிரதமர் மோடி ஸ்டைலில் வாட்ச்மேன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று ’நானும் தேசத்தின் காவலன்’ எனும் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதையடுத்து பிரதமர் மோடியின் ட்விட்டர் அக்கவுன்ட் ‘Chowkidar Narendra Modi’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து அமித்ஷா, தமிழிசை என அக்கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் அக்கவுன்டிலும் பெயருக்கு முன் காவலன் என சேர்த்துக்கொண்டு வருகின்றனர்.

இதே ஸ்டைலில் வாட்ச்மேன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்த விளம்பர போஸ்டரில்  "நானும் சவுக்கிதார் தான்" என்ற ஆங்கில வாசகத்தை வாயில் கவ்வியபடி நாய் ஒன்று காட்சிப்படுத்தடுத்தப்பட்டுள்ளது. பாஜக முன்னெடுத்த தேர்தல் பிரச்சாரத்தை வாட்ச்மேன் படக்குழு கையிலெடுத்திருப்பது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வாட்ச்மேன். இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்தப் படம் ஏப்ரல் 12-ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காமெடி நடிகை கோவை சரளாவின் சீரியஸ் பேட்டி - வீடியோ

First published:

Tags: Gv praksh kumar