ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

யாரைக் குறிப்பிடுகிறார் வடிவேலு? அப்பத்தா பாடல் வரிகளில் வம்பிழுக்கும் வைகைப்புயல்!

யாரைக் குறிப்பிடுகிறார் வடிவேலு? அப்பத்தா பாடல் வரிகளில் வம்பிழுக்கும் வைகைப்புயல்!

வடிவேலு

வடிவேலு

Vadivelu's Naai Sekar Returns | லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்பது போல மாஸாக வந்து இறக்கி இருக்கிறார் நடிகர் வடிவேல். வந்த மாத்திரத்திலேயே வம்பையும் எடுத்து வந்திருக்கிறாரா என்பதை தற்போது பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ் மக்களின் ஒரு நாள் என்பது வடிவேலு இல்லாமல் சாத்தியமாகுமா என்ற அளவிற்கு தனது நகைச்சுவை காட்சிகள் மூலமாக மக்களின் அன்றாட வாழ்க்கையில் கலந்து விட்டார் நடிகர் வடிவேலு. கடையில் சென்று பொருள் வாங்குவதில் இருந்து கண நேரத்தில் ஒரு பொருள் காணாமல் போகும் வரை... கடல்லயே இல்லையாம் என்பது தொடங்கி வட போச்சே... என வடிவேலுவின் வசனங்களுடனே ஒரு நாள் நகர்கிறது. இன்னும் ஒரு படி மேலே சொல்லப் போனால் மீம் கிரியேட்டர்களின் கன்டென்ட் கடவுளாகவே வாழ்கிறார் வடிவேல்.

  2011ம் ஆண்டு தொடங்கி விஜயகாந்த் உடனான மோதல்.. 'இருபத்தி நான்காம் புலிகேசி' சம்பள சர்சைகள்.. என தமிழ் சினிமாவிலிருந்து ஏறத்தாழ ஒதுங்கி உள்ள வடிவேலு 'நகரம்' உள்ளிட்ட திரைப்படங்களில் வடிவேலுக்கு பெரும் புகழைத் தேடித் தந்த சுராஜ் கூட்டணியில் மீண்டும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் துரை, அசல் கோளாறு இணைந்து எழுதியுள்ள அப்பத்தா என்ற பாடல் படத்தின் முதல் சிங்கிளாக தற்பொழுது வெளியாகி உள்ளது.

  தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் (நான் ஆணையிட்டால்) தொடங்கி விஜய் (நீ எந்த ஊரு) வரை அவர்களது வாழ்க்கை பஞ்ச் வசனங்களை பாடலில் வைத்து அதனை தத்துவ பாடலாக பாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

  Also Read : நடிகர் மகேஷ் பாபு குடும்பத்தில் ஒரே ஆண்டில் 3 பேர் மரணம்.! சூப்பர் ஸ்டாரை வார்த்தைகளால் தேற்றும் ரசிகர்கள்!

  இன்னும் ஒரு படி மேலே சென்று பார்த்தால் அஜித் (அட்டகாசம் - புத்தனாக வாழ்வது கடிது , ஹுட்லராக வாழ்வது கொடிது.. உனக்கென்ன), விஜய் (சச்சின் - ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம் புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்) ஆகியோர் பாடலுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் மாறி மாறி பதில் சொன்ன நிகழ்வுகள் கூட தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.

  இப்படி உச்ச நட்சத்திரங்கள் செய்யும் எல்லா வித்தையையும் தனது appatha பாட்டில் வடிவேலு செய்திருக்கிறார்.

  ' isDesktop="true" id="837166" youtubeid="N-pvp7GSD3Y" category="entertainment">

  கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி, காண்றவர்சியே தாண்டின பிளான் பண்ணி போன்ற வரிகள் வடிவேலுவின் அண்மைக்கால பயணத்தையும், தொடர்ந்து தனது சர்ச்சைகளுக்கு முற்றுவள்ளி வைக்க வடிவேல், ஸ்டாலின், சுபாஸ்கரன், உதயநிதி ஆகியோரை சந்தித்து மறுபிரவேசத்திற்கு செய்த முயற்சிகளையும் சொல்லும் வரிகளாகவே பார்க்கப்படுகிறது.

  Also Read : Guess The Celebrity : இந்த க்யூட் குழந்தை இப்போ ஒரு பிரபல நடிகை.. யார் என்று தெரிகிறதா.?

  இதனைத் தொடர்ந்து வடிவேலு நாயகனாக நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுவதை சுட்டிக்காட்டும் வகையில்,

  சராசரி லைஃப் வாழ ஐ அம் நாட் ரெடி

  சர்வைவ் பண்ண தேடிக்கிட்டேன் தனி வழி

  உள்ளிட்ட வரிகள் உருவாக்கப்பட்டது.

  இதனை அடுத்து இடம்பெற்றுள்ள,

  நான் உண்டு என் வேலை உண்டு என இருந்தேன்

  டாக்ஸால அந்த வேலையையும் இழந்தேன்

  Also Read : கர்ப்பமாக இருந்தேன்... ரகசியம் சொன்ன கயல் ஆனந்தி!

  என்ற வரி படத்தின் கதைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட வடிவேலுவை சமீப காலமாக நடிக்க விடாமல் தொடர்ந்து பிரச்சினை கொடுத்த பலரையும் சுட்டிக் காட்டவே மறைமுகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நான் ராணுவ வேலைக்கு நோ சொன்னவன், லாங்குல பாத்தா ராங்கானவன் போன்ற வரிகள் வடிவேலுவின் குணங்களை வாழ்க்கையை அப்படியே சொல்லும் வரிகளாக உருவாக்கப்பட்டுள்ளது அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திதான் என்றாலும் மீண்டும் மறுபிரவேசம் அளிக்கும் இந்த சமயத்தில் தனக்கு இடைஞ்சல் கொடுத்தவர்களை டாக்ஸ் என மீண்டும் வம்புக்கு இழுப்பது தேவை தானா என்ற கேள்வியையும் எழுப்புகிறது

  Published by:Selvi M
  First published:

  Tags: Actor Vadivelu, Entertainment, Tamil News