நேர்கொண்ட பார்வை படத்தை கணித்தாரா ஜோஃப்ரா ஆர்ச்செர்! ஆர்ச்செர் கணித்த ட்வீட்கள் ஒரு பார்வை

மோடி முதன்முறை பிரதமராக பதவியேற்ற 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி ஜோஃப்ரோ ஆர்செர் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அதில், 370-வது கூட இந்த நாள்களில் பாதுகாப்பு இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

news18
Updated: August 8, 2019, 10:14 AM IST
நேர்கொண்ட பார்வை படத்தை கணித்தாரா ஜோஃப்ரா ஆர்ச்செர்! ஆர்ச்செர் கணித்த ட்வீட்கள் ஒரு பார்வை
நேர்கொண்ட பார்வை
news18
Updated: August 8, 2019, 10:14 AM IST
இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் 2016-ம் ஆண்டு this pink picture again என்று பதிவிட்டுள்ள ட்விட்டை தமிழக நெட்டீசன்கள் தற்போது வைரலாக்கிவருகின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்செர். இந்த உலகக் கோப்பையின் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடிவருகிறார்.

ஜோஃப்ரா ஆர்ச்செர்இந்த உலகக் கோப்பைத் தொடரின்போது ஜோஃப்ரா ஆர்செரின் பழைய ட்வீட்கள் வைரலாகிவந்தன. அவர், தற்போது நடந்துவரும் நிகழ்வுகளை குறிப்பிடும் வகையில் சில வருடங்களுக்கு முன்னரே ட்வீட் செய்துள்ளார் என்று நெட்டீசன்கள் வைரலாக்கிவருகின்றனர். அவரை, மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்துவருகின்றனர்.

மோடி முதன்முறை பிரதமராக பதவியேற்ற 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி ஜோஃப்ரோ ஆர்செர் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அதில், 370-வது கூட இந்த நாள்களில் பாதுகாப்பு இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அன்று ஆர்செரின் இந்த ட்வீட் வைரலானது. அந்த ட்விட் தற்போது ட்விட்டர் பக்கத்தில் இல்லை. ஆனால், ஸ்கிரின் ஸாட் வைரலாகிவருகிறது.


உலகக் கோப்பைத் தொடர் நடந்தபோது, நிறைய நிகழ்வுகள் ஆர்செரின் நிறைய பழைய ட்வீட்களுடன் பொருந்தின. ’That hit he helmet soo hard’ என்று 2015-ம் ஆண்டு மே 1-ம் தேதி பதிவிட்டிருந்தார். அதேபோல, ஆர்செர் வீசிய பந்தில், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் ஹெல்மெட் உடைந்தது.

அதற்கு முன்னதாக, 2014-ம் ஆண்டு Maxwell why? என்று பதிவிட்டுள்ளார். அதேபோல, 2014-ம் ஆண்டு ’Finch goes’ என்று ட்விட் செய்திருந்தார். 2015-ம் ஆண்டு ’Get one woakes’ என்று பதிவிட்டிருந்தார். 2013-ம் ஆண்டு ’2 for 10’ என்று ட்விட் செய்திருந்தார். இந்த மூன்று ட்வீட்களும் இந்த உலகக் கோப்பையின் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதிய போட்டியை வெளிப்படுத்தின.

ஆஸ்திரேலியா சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் ஃபின்ஞ் உடனடியாக ஆட்டமிழந்தார். அடுத்ததாக, வார்னரை கிஹிஸ் வோக்ஸ் விக்கெட் எடுத்தார். ஆஸ்திரேலியா 10 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. அதனையடுத்து, ஜோஃப்ரா ஆர்செரின் ட்வீட்களில் உலக அளவில் வைரலாகின. அவருடைய ட்வீட் குறித்து உலகமே ஆச்சர்யத்தில் மூழ்கியது.


இந்தநிலையில், ஆர்செரின் ட்விட் நேர்கொண்ட பார்வைக்கு பொருந்தியுள்ளது. எனவே, தமிழக நெட்டீசன்கள் அந்த ட்வீட்டை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ’This pink picture again’ என்று 2016-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படம் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி வெளியானது. தற்போது, அதே படம் அஜித்குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் இன்று வெளியாகியுள்ளது. இன்று, ஆர்செரின் ட்வீட்டை தமிழ் நெட்டீசன்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். அந்த ட்வீட்டில் கீழ், யாரு சாமி இவன் என்பது போல நகைச்சுவையாக தமிழில் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Also see:

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...