பிரபல இசையமைப்பாளர் வாஜித்கான் உயிரிழப்பு - கொரோனா காரணமா?

இசையமைப்பாளர் வாஜித் கான்

பிரபல இசையமைப்பாளர் வாஜித் கான் மரணமடைந்தார். அவருக்கு வயது 42.

 • Share this:
  பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர்கள் சாஜித் - வாஜித். பிரபல தபேலா கலைஞரான உஸ்தாத் ஷராஃப் அலிகானின் வாரிசுகள். இவர்கள் இருவரும் தபாங், ஏக் தா டைகர் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். சல்மான் கானின் பியார் கியா தோ தர்ணயா கியா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானதால் சல்மான் கானின் ஆஸ்தான் இசையமைப்பாளர்களாக இந்த சகோதர்கள் விளங்கினர்.

  இந்நிலையில் இரட்டையர்களில் ஒருவரான வாஜித் கான் இன்று மரணமடைந்தார். மரண செய்தியை பிரபல செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்த இசையமைப்பாளர் சலீம், “வாஜித் கானுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் இருந்தன. கடந்த சில நாட்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆனால் மீண்டும் அவருக்கு சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்பட்டது. கடந்த 4 நாட்களாக அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் மரணமடைந்தார்” என்று கூறினார்.

  அவரது குடும்பத்தார் வட்டாரங்கள், அவருக்கு சிறுநீரக பிரச்னை இருந்து வந்ததால், எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்திருந்ததாகவும், கொரோனா பாதிப்பு இருந்ததாகவும், கடைசி நாட்கள் மிகவும் வேதனைப்பட்டதாகவும் தெரிவிக்கின்றன. வாஜித் கானின் மறைவு பாலிவுட்டில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அமிதாப்பச்சன் தொடங்கி பல முன்னணி திரைத்துறை பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  மேலும் படிக்க: நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு பரபரப்பு புகார்


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sheik Hanifah
  First published: