“தேர்தல் வருது... ஜனங்க ஜாக்கிரதை” இமான் இசையில் கரு.பழனியப்பன் வெளியிட்ட சிறப்புப் பாடல்!

இந்த பாடலின் நோக்கம் குறித்து கரு.பழனியப்பன், இசையமைப்பாளர் இமான் ஆகியோர் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பலவிதமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Web Desk | news18
Updated: March 28, 2019, 9:18 AM IST
“தேர்தல் வருது... ஜனங்க ஜாக்கிரதை” இமான் இசையில் கரு.பழனியப்பன் வெளியிட்ட சிறப்புப் பாடல்!
கரு.பழனியப்பன்
Web Desk | news18
Updated: March 28, 2019, 9:18 AM IST
மக்களவைத் தேர்தலையொட்டி திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் முயற்சியில் வெளியாகியுள்ள தேர்தல் பாடல் ஒன்று, சமூகவலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

டி.இமான் இசையில், யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடல், கடந்த நான்கரை ஆண்டு ஆட்சியை திரும்பி பார்க்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று இயக்குநர் கரு பழனியப்பன் கூறுகிறார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடூரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த கருத்துக்கள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளன.

பெண்பிள்ளைகளை பெற்ற அனைவரின் மனதிலும் இது போன்ற சம்பவங்களுக்கு தீர்வு என்ன என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது என இயக்குநர். சுட்டிக்காட்டுகிறார்.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பரப்புரை பாடல் போல, வாக்காளருக்கான விழிப்புணர்வு பாடலை வெளியிடுவதே தங்கள் நோக்கம் என பழனியப்பன் கூறுகிறார்.

நியாயமான கேள்விகளையே தங்கள் படைப்பில் முன்வைத்திருப்பதாக இசையமைப்பாளர் டி.இமான் குறிப்பிடுகிறார். நிலைமையை மாற்ற யோசித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறும் இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Also see... வாக்காளர் விழிப்புணர்வு சிறப்பு பாடல்
Loading...
First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...