ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

"வருங்கால கணவர் இந்த நடிகர் மாதிரி இருக்கனும்" - நடிகையின் விருப்பம்!

"வருங்கால கணவர் இந்த நடிகர் மாதிரி இருக்கனும்" - நடிகையின் விருப்பம்!

வி.ஜே.பார்வதி - அர்ஜூன் தாஸ்

வி.ஜே.பார்வதி - அர்ஜூன் தாஸ்

தனக்கு புரோபோஸ் செய்த அர்ஜூன் தாஸ் போலவே கணவரும் இருக்க வேண்டும் எனக் பார்வதி கூறியிருப்பது, சமூகவலைதளங்களில் அவரை மீண்டும் லைம் லைட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

மாஸ்டர் பட வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் போல் தனக்கு வருங்கால கணவர் அமைய வேண்டும் என வி.ஜே. பார்வதி தெரிவித்துள்ளார்

வீடியோ ஜாக்கியாக இருந்த பார்வதி தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியாக இருக்கும் சன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். நாள்தோறும் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா ஷோவிலும் அவர் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த தேவயானி, திண்டுக்கல் லியோனி, அபிஷேக் சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் இல்லதரசிகளிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதில் தேவயானியின் மருமகளாக பவித்ரா கதாப்பாத்திரத்தில் வி.ஜே.பார்வதி நடிக்கிறார். இந்நிலையில், தன்னுடைய வருங்கால கணவர் குறித்து பேட்டி ஒன்றில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கைதி படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த அர்ஜூன் தாஸ் போன்று இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். நேர்மையாக இருக்க வேண்டும், என்னை நன்றாக பார்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும் எனவும் பார்வதி கூறியுள்ளார்.

' isDesktop="true" id="482297" youtubeid="rkaXSdFk4eQ" category="entertainment">

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக சன் டிவியில் ஒளிபரப்பானது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வி.ஜே பார்வதி, அர்ஜூன் தாஸூடன் கலகலப்பாக உரையாடினார். மேலும், அர்ஜூன் தாஸ் பார்வதியை கியூட்டாக புரோப்போஸ் செய்திருந்தார். யூடியூப்பில் இருக்கும் இந்த வீடியோ இன்றளவும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 2 மில்லியன் பார்வைகளையும் அந்த வீடியோ பெற்றுள்ளது. தனக்கு புரோபோஸ் செய்த அர்ஜூன் தாஸ் போலவே கணவரும் இருக்க வேண்டும் எனக் பார்வதி கூறியிருப்பது, சமூகவலைதளங்களில் அவரை மீண்டும் லைம் லைட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

Also Read:   ஜகமே தந்திரம் ரிலீஸ்: தனுஷுக்கு தமிழில் வாழ்த்து கூறிய ஹாலிவுட் இயக்குனர்கள்!

நாடகத்தில் நடிப்பது குறித்து பேசிய வி.ஜே பார்வதி, தன்னுடன் நடிப்பவர்கள் அனைவரும் மூத்த நடிகர்களாக இருப்பதாகவும், நன்றாக கவனித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு இணையாக நடிப்பது என்பது சவாலாக இருப்பதாக கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூட்டிங் ஸ்பாட்டில் அவர்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொண்டதாகவும் வி.ஜே பார்வதி தெரிவித்துள்ளார். அர்ஜூன் தாஸிடம் புரோபாஸ் வாங்கிய பார்வதி, மீண்டும் அவரைப் பற்றியே பேசியிருப்பது, பார்வதிக்கு அர்ஜூன் தாஸ் மீது அலாதி பிரியம் இருக்கிறதோ? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் சிலர், உங்களின் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் என்றும் பார்வதிக்கு முன்கூட்டியே வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Arjun Doss, Entertainment, Master