• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சித்ரா ₹1.5 கோடியில் வீடு, ஆடி கார் வாங்கியது குறித்து விசாரிக்க வேண்டும்: மாமனார் போலீசில் புகார்

சித்ரா ₹1.5 கோடியில் வீடு, ஆடி கார் வாங்கியது குறித்து விசாரிக்க வேண்டும்: மாமனார் போலீசில் புகார்

Youtube Video

சித்ராவின் தாயாருக்கு அனைத்து விவரங்களும் தெரிந்திருந்தும் பாலியல் ரீதியில் மிரட்டல் விடுத்த அந்த நபர்களுக்குப் பயந்து அமைதி காத்து வருவதாகவும் சித்ராவின் மாமனார் குற்றம்சாட்டியுள்ளார்

  • Share this:
    சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தனது புகாரில் அதிர்ச்சிகரமான தகவல்களைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 3 நபர்களை சித்ரா காதலித்ததாகவும் டிவி நிகழ்ச்சி்த் தொகுப்பாளர் ஒருவர் அவரை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

    சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக இரு குடும்பங்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில், ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் சித்ராவின் கடந்த கால வாழ்க்கை பற்றி சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    புகாரில் குறிப்பிட்ட அதிர்ச்சிகரமான தகவல்கள் என்னென்ன?

    சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைக்குப் பின் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன

    இதுவரை அதுகுறித்து இரு குடும்பங்களும் வாய் திறக்காத நிலையில், சனிக்கிழமை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ரவிச்சந்திரன், செய்தியாளர்கள் சந்திப்பில் அதைக் குறிப்பிட்டுள்ளார்

    தனது ஒரே மகனான ஹேம்நாத் கடந்த ஒன்றரை வருடங்களாக சித்ராவை காதலித்து வந்ததாகவும், பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்

    அப்போது ஜாதகத்தில் தனது மகனுக்கு தோஷம் இருப்பது தெரியவந்ததையடுத்து நீலாங்கரையில் உள்ள நடிகை சித்ராவின் குலதெய்வ கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்துவிட்டு திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

    நாளடைவில் சித்ராவின் புகழ் அதிகரித்ததால் அவரது தாயார் திருமணத்திற்கு காலம்தாழ்த்தி வந்துள்ளதாகவும், இதனால் கோபமடைந்த சித்ரா தன்னிடம் வந்து தெரிவித்ததையடுத்து அவரது தாயாரிடம் திருமணம் குறித்து தான் பேசியதாகவும், கடந்த அக்டோபர் மாதம் கோடம்பாக்கத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்

    இதனை தொடர்ந்து சித்ராவின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த தன்னிடம் போதுமான பணம் இல்லை என்றும் 5 லட்சம் ரூபாய் மட்டும் இருப்பதாக சித்ராவின் தாயார் தன்னிடம் தெரிவித்ததாகவும், அதற்கு பணம் பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும், தனது வீட்டை அடகு வைத்து திருமணம் நடத்தலாம் என கூறிவிட்டு அம்பத்தூரில் உள்ள திருமண மண்டபத்தை கடந்த 7 ம் தேதி இருகுடும்பத்தாரும் இணைந்து முன்பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்

    அந்த மண்டபத்திற்கு இரு வீட்டாரும் சென்று பதிவு செய்ததாகவும் அது தொட்ரபான சிசிடிவி காட்சிகளை ஆணையரிடம் ஒப்படைத்திருப்பதாகவும் ரவிச்சந்திரன் தெரிவித்தார்

    சம்பவத்திற்கு முதல்நாள் இரு வீட்டாரும் சந்தோஷமாக இருந்த நிலையில், எவ்வித பிரச்னையும் ஏற்படவி,ல்லை என்றும் ரவிச்சந்திரன் தெரிவித்தார்

    சித்ரா சின்னத்திரை மட்டுமின்றி, சினிமா மற்றும் விளம்பரங்களில் நடித்ததாகவும் இதனால் பல்வேறு நபர்களுடன் சித்ரா தொடர்பில் இருப்பதை தெரிந்துதான் திருமணத்திற்கு சம்மதத்திற்கு தெரிவித்ததாகவும்,இதனால் எந்தவிதமான சண்டையும் ஏற்பட்டதில்லை எனவும் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்

    ஆனால் ரவிச்சந்திரன், சென்னை காவல் ஆணையரிடம் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள புகாரில், சித்ரா தொடர்பான சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்

    சித்ரா ஏற்கனவே 3 ஆண்களைக் காதலித்துள்ளதாகவும், ஏற்கனவே நிச்சயதார்த்தம் வரை சென்று நின்று விட்டதாக தான் அறிந்து கொண்டதாகவும் ஆணையரிடம் அளித்த புகாரில் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்

    தனியார் டிவி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றும் இளைஞர் ஒருவர் சித்ராவுடன் டேட்டிங் சென்று அந்த புகைப்படங்களை வைத்து மிரட்டி வந்ததாக ஒரு வலைதளத்தில் செய்தி வெளிவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்

    தொடர்ந்து அரசியல்வாதி ஒருவர் சித்ராவுடன் தினசரி பேசி வந்ததாகவும் திருமணம் செய்தால் பல ஆதாரங்களைக் காண்பித்து திருமணத்தை தடை செய்யப் போவதாக மிரட்டியதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியானதாகவும் குறிப்பிட்டுள்ளார்

    சின்னத்திரையில் டிஆர்பி ரேட்டிங்கில் சித்ரா முன்னனணியில் இருந்ததால், திருமணத்திற்குப் பின் ரேட்டிங் குறையலாம் என்பதால் சிலர் அவருக்கு மிரட்டல் விடுத்திருக்கலாம் என்றும் ரவிச்சந்திரன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்

    சித்ரா தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் சம்பந்தப்பட்ட நாட்களின் சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதாக வெளியான செய்திகளையும் தான் அறிந்து கொண்டதாக ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்

    மேலும் சித்ரா சில அழைப்புகள் வந்தால் பதற்றமடைந்து உடனே தனியாகப் போய்ப் பேசுவார் என்றும் அந்த கால் லிஸ்ட்டை அழித்து விடுவார் என தனது மகன் தன்னிடம் தெரிவித்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    சித்ராவின் தாயாருக்கு அனைத்து விவரங்களும் தெரிந்திருந்தும் பாலியல் ரீதியில் மிரட்டல் விடுத்த அந்த நபர்களுக்குப் பயந்து அமைதி காத்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்

    சமூக வலைதளங்கிளல் வெளியான செய்திகளின் அடிப்படையில் சித்ராவின் செல்போன் அழைப்பு பட்டியலை எடுத்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என ரவிச்சந்திரன் ஆணையரிடம் அளித்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்

    சித்ராவின் குடும்பத்தினர் கடைசியாக திருவான்மியூரில் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியது குறித்தும், ஆடி கார் வாங்கியது குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்

    சித்ராவின் மரணம் குறித்து நாளுக்கு நாள் புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் போலீசாரின் விசாரணை தீவிரம் எடுக்குமா? அல்லது ஹேம்நாத் கைதுடன் வழக்கை முடித்து விடுவார்களா என்பது போகப் போகத் தான் தெரியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: