சித்ராவின் மரணம் : பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் சித்ராவின் தாய்

Youtube Video

பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் கொலை தான் என்றும் ஹேம்நாத் துரோகம் செய்து விட்டார் என்றும் சித்ராவின் தாய் கொதித்துள்ளார்.

  • Share this:
    கடந்த 9ம் தேதி அதிகாலையில் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையின் பின்னணிக்கு மன அழுத்தம் தான் காரணம் என போலீசார் கூறியுள்ளனர். அதேநேரம் தற்கொலைக்குத் துாண்டியதாக, சித்ராவின் கணவர் ஹேம்நாத்தைப் போலீசார் கைது செய்தனர்.

    யாரையோ காப்பாற்றுவதற்காக தனது மகனை அவசர கதியில் போலீசார் கைது செய்ததாக ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் குற்றம்சாட்டினார். வியாழக்கிழமை தனது மகனை சந்திக்கச் சென்ற ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில், விசாரணையின் போக்கு திருப்தி அளிப்பதாக இல்லை என புகார் தெரிவித்தார். அதேநேரம், சித்ராவிற்கு கடன் பிரச்னை இருந்திருக்கலாம் என்றும் அதன் அடிப்படையில் கூட அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் புதிய தகவலை தெரிவித்தார்.

    இந்தச் சூழலில் திருவான்மியூரில் உள்ள தங்களது வீட்டில் சித்ராவின் பெற்றோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தனர். தங்களது வீடு, மாமனார் வீடு இருக்கும்போது ஏன் சித்ரா தனியாக தங்கினார் என்பது தங்களுக்குத் தெரியாது என்றனர். திருமணத்திற்கு முன்பிருந்தே கடன் இருந்ததாகத் தெரிவித்த அவர்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிப்பது குறித்து ஹேம்நாத் அதிகளவில் தொல்லை கொடுத்தார் எனக் குற்றம்சாட்டினர்.



    சித்ராவைப் பற்றி அவதுாறான கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் தனது மகள் அப்படிப்பட்டவர் அல்ல எனவும் கதறிய தாய் விஜயா, சித்ரா கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினார் சித்ராவின் உடற்கூறாய்வு அறிக்கை இதுவரை வழங்கப்படவில்லை. அவரது உடற்கூறாய்வும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படவில்லை என்கின்றனர் பெற்றோர்.

    சித்ரா மரணம் தொடர்பான விசாரணையின் போக்கு எந்தத் திசையில் செல்கிறது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கவே செய்கிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published: