• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • "ஆய்வுக்கு உட்படுத்தப்படும் சித்ராவின் நகங்கள்” - வழக்கு 11-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

"ஆய்வுக்கு உட்படுத்தப்படும் சித்ராவின் நகங்கள்” - வழக்கு 11-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

நடிகை சித்ரா

நடிகை சித்ரா

சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றின் முடிவுகள் ஒரு வாரத்தில் தெரியவரும் எனவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.

    ‘மிகச் சிறிய’ மேலாடையால் விமானத்தில் ஏற மாடல் அழகிக்கு மறுப்பு!

    கடந்த டிசம்பர் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், சித்ரா பட்டுப்புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே அவர் தற்கொலை செய்துக் கொண்டதாகவும், சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதேபோல அவரது தொலைப்பேசி உரையாடல்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த ஆய்வறிக்கைகள், பிப்ரவரி 10-ம் தேதி வந்துவிடும் என எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.  இதனை பதிவு செய்த நீதிபதி, வழக்கை பிப்ரவரி 11-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: