• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Archana : "செம க்யூட்" மகளின் குழந்தை புகைப்படத்தை பதிவிட்ட அர்ச்சனா!

Archana : "செம க்யூட்" மகளின் குழந்தை புகைப்படத்தை பதிவிட்ட அர்ச்சனா!

"செம க்யூட்" மகளின் குழந்தை புகைப்படத்தை பதிவிட்ட அர்ச்சனா

"செம க்யூட்" மகளின் குழந்தை புகைப்படத்தை பதிவிட்ட அர்ச்சனா

தொகுப்பாளினி அர்ச்சனா அண்மைக்காலமாக இன்ஸ்டாகிராம், யூ டியூப் என சமூக வலைதளங்களிலும் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார்

  • Share this:
தன்னுடைய மகள் குழந்தையாக இருக்கும்போது, தங்கையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை தொகுப்பாளினி அர்ச்சனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா. சன் டிவியில் தொடங்கிய அவரது பயணம் விஜய் டிவி, ஜீ தமிழ், மீண்டும் விஜய் டிவி என தொடர்கிறது. மியூசிக், காமெடி என அனைத்து ரியாலிட்டி ஷோக்களிலும் தொகுபாளினியாக வரும்போது, தனக்கான ஒரு முத்திரையை பதித்து வருகிறார். நிகழ்ச்சி எந்த இடத்திலும் சோர்வடையாத வண்ணம் கடகட வென பேசி, ஷோவை எப்போதும் டெம்போ(Tempo) குறையாமல் வைத்திருப்பார். அண்மைக்காலமாக இன்ஸ்டாகிராம், யூ டியூப் என சமூக வலைதளங்களிலும் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மகள் மற்றும் தங்கையுடன் இணைந்து யூடியூப்பில் வித்தியாசமான கன்டென்டுகளை போடும் அவரின் வீடியோவுக்கு லட்சக்கணக்கான பார்வைகள் கிடைக்கிறது. அண்மையில் அவர் வெளியிட்ட 'பாத்ரூம்' வீடியோ ஷோசியல் மீடியாக்களில் மிகப்பெரும் டிரெண்டை செட் செய்தது. அவரின் ஒரு வீடியோ பல சேனல்களுக்கும் கன்டென்டாக மாறியது. இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மகளுடன் இணைந்து வீடியோ பதிவிட்டு வருகிறார்.

ALSO READ |  குடும்பத்துடன் மரணம் என சமூக வலைத்தளங்களில் புரளி பரப்பி வசூல்: நடிகர் மங்கள நாத குருக்கள் போலீசில் புகார்!

அந்த வகையில், தற்போது அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மகள் சாரா குழந்தையாக இருக்கும்போது, கைகளில் ஏந்தியிருக்கும் அர்ச்சனாவுடன், அவரது தங்கையும் இருக்கும் பழைய புகைப்படத்தை தனது ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூவரும் க்யூட்டாக இருக்கும் அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும், மகளை வைத்திருக்கும் அர்ச்சனாவின் புகைப்படத்துக்கு லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். அண்மைக்காலமாக நெகடிவ் இமேஜ் அர்ச்சனா மீது அதிகம் இருந்து வந்தது. சமூகவலைதளங்களில் அவரின் செயல்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

ALSO READ |  இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோயர்ஸ் - நன்றி தெரிவித்த விஜய் டிவி பிரபலம்

குறிப்பாக, பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டு, அதில் அவர் நடந்து கொண்ட விதம் பலருக்கும் விமர்சனத்தை உண்டாக்கியது. அதிலிருந்து, தற்போதுவரை அர்ச்சனாவின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு என்றே சமூக வலைதளங்களில் ஒரு நெட்டிசன் கூட்டம் இருந்து வருகிறது.

 




 

அவர்கள்கூட செல்ல மகளை ஏந்திருக்கும் அர்ச்சனாவின் புகைப்படத்துக்கு லைக்கும், அன்பையும் தெரிவித்துள்ளனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும், கமெண்டுகளும் அந்தப் புகைப்படத்துக்கு கிடைத்துள்ளது. அர்ச்சனாவின் 'அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா?' என்ற டிரேட் வார்த்தை கடும் விமர்சனத்துக்குள்ளானது.

ALSO READ |  அவார்டை ரிட்டர்ன் செய்த 'பிக்பாஸ்' பாலாஜி முருகதாஸ் - என்ன பிரச்சனை?

அவர் இப்போது எங்கு சென்றாலும் அல்லது நெகிழ்ச்சியில் பங்கேற்றாலும், அர்ச்சனாவை கலாய்க்க நினைப்பவர்கள் இந்த வார்த்தையை வைத்தே கலாய்க்கின்றனர். ஆனால், அவரின் அந்த வார்த்தையை புகைப்பட விஷயத்தில் பொருத்தி நெட்டிசன்கள் மகிழ்கின்றனர். அன்பு ஜெயிக்கும் என நம்புறோம் அர்ச்சனா! என குழந்தையின் புகைப்படத்துக்கு கீழ் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: