Home /News /entertainment /

அர்ச்சனாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது - அவரே கொடுத்த அப்டேட்

அர்ச்சனாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது - அவரே கொடுத்த அப்டேட்

அர்ச்சனா

அர்ச்சனா

தன்னுடைய மகள் சாரா தொடர்ந்து, தன்னுடைய ஹெல்த் அப்டேட்டை கொடுப்பார் எனவும் கூறியிருந்தார்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
அண்மையில் மூளையில் சிறிய ஆப்ரேஷன் செய்து கொண்ட அர்ச்சனா, தான் எப்படி இருக்கிறேன் என்ற அப்டேட்டைக் அவரே கொடுத்துள்ளார்

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினயாக இருப்பவர் வி.ஜே அர்ச்சனா. சன் டிவியில் தொகுப்பாளனியாக மீடியாவுக்குள் நுழைந்த அவர், விஜய் டீவியில் நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானர். பின்னர், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்ற அவர், பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கினார். நடிகர் ரஜினிகாந்த் அவர்களையும் பேட்டி எடுத்து, தன்னுடைய உட்சபட்ச கனவையும் அடைத்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றிக்கொண்டிருந்த அர்ச்சனா, பிக்பாஸ் ஷோ மூலம் மீண்டும் விஜய் டீவிக்கே திரும்பினார்.

Also Read: Pandian Stores: கண்ணனை தலை முழுகிய மூர்த்தி - இழுத்து மூடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டு கதவு

பிக்பாஸ் ஷோவில் 100 நாளை நெருங்கிக் கொண்டிருந்தபோது நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். பின்னர், பிக்பாஸ் ஷோவுக்கு தயவு செய்து போகாதீர்கள் என்று தன்னுடைய தனிப்பட்ட கருத்தாக வேண்டியவர்களிடமும் கூறினார். கடைசியாக, மா.கா.பா ஆனந்துடன் இணைந்து ‘Mr & Mrs சின்னத்திரை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். யூ டியூப்பில் ஆக்டிவாக இருந்த அர்ச்சனா, திடீரென தனக்கு ஆப்ரேஷன் நடக்க இருப்பதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். மூளையில் சிறிய ஆப்ரேஷன் செய்ய வேண்டியிருப்பதாகவும், நலமுடன் திரும்ப அனைவரும் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டார்.

Also Read: சென்னை மக்களை நம்பி வந்து ஜெயித்தேன்.. விஜய் டிவி சுனிதாவின் வெற்றி பயணம்!

மேலும், தன்னுடைய மகள் சாரா தொடர்ந்து, தன்னுடைய ஹெல்த் அப்டேட்டை கொடுப்பார் எனவும் கூறியிருந்தார். அதன்படியே, ஒவ்வொரு நாளும் அம்மா அர்ச்சனாவின் ஹெல்த் அப்டேட்டை சாரா கொடுத்துக்கொண்டிருந்தார். நல்லபடியாக ஆப்ரேஷன் முடிந்து 10 நாட்கள் மருத்துவமனை ஓய்வுக்குப் பிறகு வீடு திரும்பிய அர்ச்சனா, தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தன்னுடைய ஹெல்த் அப்டேட்டை அவரே கொடுத்து வருகிறார். இப்போதைய நிலை குறித்து அர்ச்சனா கொடுத்துள்ள தகவலில், மூக்கு வழியாக ஆப்ரேஷன் நடைபெற்றிருப்பதால், குரல் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

முழு ஓய்வில் இருப்பதாகவும் அர்ச்சனா கூறியுள்ளார். இன்னும் 10 நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், அதன்பிறகு வழக்கம்போல் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க உள்ளதாக கூறியுள்ளார். அர்ச்சனா கொடுத்துள்ள அப்டேட், அவருடைய ரசிகர்களுக்கும் மட்டுமல்லாமல் நலம் விரும்பிகளுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளார். இந்த அப்டேட்டை கேட்டவுடன் அவருடைய ரசிகர்கள், முழு ஓய்வு எடுத்து பூரண குணமடைந்த பிறகு பணியை தொடருமாறு அவரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோஷியல் மீடியாவல் பெரும்பாலும் அதிக ஹேட்டர்ஸைக் கொண்டிருந்த அர்ச்சனாவுக்கு, தற்போது நலம் விரும்பிகள் அதிகரித்துள்ளனர். ஹேட்டர்ஸைப் பற்றி கவலைப்படவில்லை என்று அவர் சொல்லிக் கொண்டே இருந்தாலும், தனக்கு வரும் தவறான விமர்சனங்களைக் கண்டு ஒரு சில சமயங்களில் வெளிப்படையாக கோபத்தை வெளிக்காட்டினார். ஆனால், அந்த நிலை தற்போது மாறியுள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:

Tags: Archana biggboss, Archana zara, Vijay tv

அடுத்த செய்தி