Roja: ரோஜா சீரியலின் புதிய வில்லி இவரா? தொகுப்பாளினியின் சின்னத்திரை என்ட்ரி!

ரோஜா சீரியல்

வில்லி கதாப்பாத்திரத்தில் ஒன்றிப்போய், வில்லத்தனங்களை அரங்கேற்றி வந்தார்.

  • Share this:
சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலின் வில்லி கதாப்பாத்திரத்தில், தொகுப்பாளினி அக்ஷயா நடிக்க இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் தொலைக்காட்சியின் அடையாளமாக இருக்கும் சீரியல்களில் முக்கிய இடத்தை அண்மைக்காலத்தில் ரோஜா சீரியல் பிடித்துள்ளது. வெள்ளித்திரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய வடிவுக்கரசி நடிக்கும் இந்த தொடரில் கதாநாயகனாக சிபு சூரியன், நாயகியாக பிரியங்கா நல்காரி நடிக்கின்றனர். 800 எபிசோடுகளை கடந்திருக்கும் ரோஜா தொடரில் வில்லியாக ஷாமிலி குமார் நடித்து, ரசிகர்களிடையே ஏகோபித்த எதிர்ப்பை சம்பாதித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தளவுக்கு வில்லி கதாப்பாத்திரத்தில் ஒன்றிப்போய், வில்லத்தனங்களை அரங்கேற்றி வந்தார். வில்லியாக வரக்கூடிய ஒவ்வொரு பிரேம்களிலும் நடிப்பை தெறிக்க விட்ட அவருக்கு, சன் குடும்ப தொலைக்காட்சி விருது விழாவில் சிறந்த வில்லிக்கான விருதை பெற்று அசத்தினார். அவருடைய நடிப்பை ரசிகர்கள் பெருமளவு ரசித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென சீரியலில் இருந்து விலகினார். அதற்கான காரணத்தை தான் நடத்தி வரும் யூ டியூப் சேனலில் வெளியிட்டார்.

அதில், ரோஜா சீரியலில் வில்லியாக நடித்தபோது ரசிகர்கள் கொடுத்த ஆதரவு, மிகுந்த உறுதுணையாக இருந்தாகவும், ஆனால் அந்த சீரியலில் மேற்கொண்டு நடிக்க முடியாது எனக் கூறினார். தற்போது கர்ப்பமாக இருப்பதால், தொடர்ந்து சீரியல் சூட்டிங்கில் பங்கேற்க முடியாது என்பதால், சிறிது காலத்துக்கு நடிப்பில் இருந்து விலகியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.



 




View this post on Instagram





 

A post shared by Akshayaa 👸 (@vjakshaya)






இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், ரோஜா சீரியலின் வில்லி யார்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. வில்லி கதாப்பாத்திரத்தில் முத்திரை பதித்த ஷாமிலியின் நடிப்புக்கு இணையாக அந்தக் கதாப்பாத்திரத்தை ஈடு செய்யக் கூடிய ஒருவர் நடிக்க வேண்டும். இந்த எதிர்பார்ப்புக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. ரோஜா சீரியலின் வில்லியாக சன்டிவியில் தொகுப்பாளினியாக உள்ள அக்ஷயா நடிக்க உள்ளார்.

Also read.. Yaaradi Nee Mohini: யாரடி நீ மோகினியின் 1200-வது எபிசோட் - கொண்டாடிய நட்சத்திரங்கள்!

கதைப்படி, வில்லி அனு சிறையில் இருப்பதுபோன்றும், பின்னர் அங்கிருந்து தப்பிவிடுவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அனு சிறையில் இருந்து தப்பித்துவிட்டதால், அவருக்கு பதிலாக பொய்யான ஒருவர் சிறைக்கு வருகிறார். அவர் தான் அக்ஷயா. அனுவின் கதாப்பாத்திரத்தை அவர் ஈடு செய்யும் வகையில் தற்போது கதைக்களம் இருக்கும் நிலையில், அடுத்தடுத்த எபிசோடுகளில் உண்மையான வில்லியாக இவர் மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அனுவின் வில்லத்தனங்களுக்கு ஏற்ப அக்ஷயாவின் நடிப்பு இருக்குமா? என்ற எதிர்பார்ப்புக்கான பதில் அடுத்தடுத்த எபிசோடுகளில் கிடைக்கும்.

அதேநேரத்தில் அனுவின் கதாபாத்திரத்தை உயிரோட்டமாக அப்படியே வைத்திருக்கும் வகையில், போலியான கதாப்பாத்திரத்தை உருவாக்கி, ஷாமிலி குமார் வரும் வரையில் இவரை வைத்து கதைக்களம் நகர்த்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை சிறையில் இருந்து தப்பிய உண்மையான வில்லி குறிப்பிட்ட எபிசோடுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பதற்கான வாய்ப்பையும் இயக்குநர் பெண்டிங்கில் வைத்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: