தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இதனை கிண்டலடிக்கும் விதமாக நடிகை ஐஸ்வர்யா ராயை மையப்படுத்தி மீம்ஸ் ஒன்றை வெளியிட்ட நடிகர் விவேக் ஓபராய்க்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், நேற்று மாலை கருத்து கணிப்புகள் வெளியானது. இதில், பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பலர் விமர்சித்தும், வரவேற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கருத்துக் கணிப்பை கிண்டலடிக்கிறேன் என்ற பெயரில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், மீம்ஸ் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாக சித்தரித்து அந்த மீம்ஸ் போடப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய் - சல்மான் கான் உள்ள புகைப்படத்தைக் கருத்துக் கணிப்பு என்றும், ஐஸ்வர்யா ராய் - விவேக் ஓப்ராய் உள்ள படத்தை தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு என்றும் ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சன், மகள் மகள் ஆகியோரைக் கொண்ட படத்தை தேர்தல் முடிவுகள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐஸ்வர்யா ராய் - சல்மான் கான் ஆகிய இருவரும் காதலிப்பதாக 2000-ம் ஆண்டுகளில் செய்திகள் வெளியானது. ஆனால் இருவரும் 2002-ல் பிரிந்தாக கூறப்பட்டது. பிறகு ஐஸ்வர்யா ராய், விவேக் ஓப்ராயைக் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதுவும் பிரிவில் முடிந்ததாக தகவல்கள் வந்தன.
பின்னர், 2007-ம் ஆண்டில் நடிகர் அபிஷேக் பச்சனை மணந்தார் ஐஸ்வர்யா ராய். இருவருக்கும் ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டலடிக்கும் வகையில் விவேக் ஓபராய் இந்த மீம்ஸை பகிர்ந்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
“கிரியேட்டிவ், அரசியல் எதுவும் இல்லை. இதுதான் வாழ்க்கை என்று அந்த மீமைப் பகிர்ந்து விவேக் ஒப்ராய் ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் குவிந்து வருகிறது. அனைவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் காதல்கள், பிரிவுகள் இருந்திருக்கலாம் அதனை இப்படி கிண்டலடிப்பது நாகரீகமாக இருக்காது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விவேக் ஓபராய் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதமே வெளியாக இருந்த நிலையில், தேர்தல் ஆணையம் படம் வெளியாக தடை விதித்தது.
விவேக் ஓபராய் தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
Photos: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!
மேலும் செய்திகள்...!
திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லை - ஐஸ்வர்யா ராஜேஸ்
சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய
இங்கே கிளிக் செய்க. பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும்
இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.