Home /News /entertainment /

முதல்முறையாக விஜய் சேதுபதி படத்தில் இணையும் விவேக்!

முதல்முறையாக விஜய் சேதுபதி படத்தில் இணையும் விவேக்!

விவேக்

விவேக்

  • News18
  • Last Updated :
    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடிக்கிறார்.

    பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    விஜய் சேதுபதியின் 33-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கிறார். வில்லனாக இயக்குநர் மகிழ் திருமேனி நடிக்கிறார். கடந்த ஜூன் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பழனியில் துவங்கியது.



    கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவிலான பிரச்னையும் மையமாக பேசப்பட இருக்கிறது. விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடிக்கிறார். இதுவே இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Vijay Sethupathy

    அடுத்த செய்தி