Home /News /entertainment /

விஜய்யின் பிகிலை ஓரங்கட்டிய அஜித்தின் விஸ்வாசம் - புதிய ரிப்போர்ட்

விஜய்யின் பிகிலை ஓரங்கட்டிய அஜித்தின் விஸ்வாசம் - புதிய ரிப்போர்ட்

விஸ்வாசம் படத்தில் அஜித்

விஸ்வாசம் படத்தில் அஜித்

2020-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறையைக் குறிவைத்து பிகில், நம்ம வீட்டுப்பிள்ளை, சங்கத்தமிழன், பேட்ட, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை சன் டிவி ஒளிபரப்பியது.

இதில் அதிகம் பேர் பிகில் படத்தைப் பார்த்திருப்பதாக டி.ஆர்.பி ரேட்டிங் ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது விஜய்யின் பிகில்.

இரண்டாவது இடத்தில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படமும், 3-வது இடத்தை சண்டக்கோழி 2 திரைப்படமும் பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மே தினத்தில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பான விஸ்வாசம் 18.1 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது.

அதேபோல் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் குடியரசு தினத்தன்று ஒளிபரப்பான சர்கார் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் டி.ஆர்.பி ரேட்டிங்கை விஜய்யின் சர்கார், பிகில் ஆகிய 2 படங்களும் முறியடிக்கத் தவறிவிட்டன.





நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தை அட்லீ இயக்கியிருந்தார். நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் சிவா - அஜித் கூட்டணியில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் குடும்ப ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

மேலும் படிக்க: நடிகர் சங்கத் தேர்தல் - அனைத்து வழக்குகளிலும் நாளை தீர்ப்பு!
Published by:Sheik Hanifah
First published:

Tags: Bigil, Viswasam

அடுத்த செய்தி