ஓடிடியில் வெளியாகும் விஷ்ணு, கௌதம் வாசுதேவ மேனனின் எஃப்ஐஆர்!

விஷ்ணு விஷால்

அஸ்வத் இசையமைக்க, அருள் வின்சென்ட் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா இரண்டாம் அலையில், ஓடிடியில் கரை ஒதுங்கியிருக்கும் மற்றுமொரு படம் எஃப்ஐஆர். விஷ்ணு விஷால் தயாரித்து நடித்திருக்கும் இப்படம் விரைவில் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

கொரோனா முதல் அலையைத் தொடர்ந்து இரண்டாம் அலை இந்தியாவை திணறடித்தது. முக்கியமாக தமிழகம் அதன் கோரப்பிடியிலிருந்து இன்னும் மீளவில்லை. திரையரங்குகள் திறப்பதற்கு இன்னும் பல மாதங்கள் பிடிக்கும். கடன் வாங்கி படம் எடுத்தவர்கள் வட்டியாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம், ஓடிடி



ஓரளவு முகம் தெரிந்த நடிகர்களின் படங்களை ஓடிடி தளங்கள் நல்ல விலைக்கு வாங்குகின்றன. கொஞ்சம் குறைந்தாலும் பாதகமில்லை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். தனது எஃப்ஐஆர் படத்தை ஓடிடியில் வெளியிட விஷ்ணு விஷால் முடிவு செய்துள்ளார். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா உள்ளிட்டவர்கள் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த மனு ஆனந்த் படத்தை இயக்கியுள்ளார். கௌதம் வாசுதேவ மேனனும் இதில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read... மாயாவதி குறித்து ஆபாச பேச்சு - தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நடிகர்!

இதில் போலீசால் தேடப்படும் அபுபக்கர் அப்துல்லா என்ற முஸ்லீம் இளைஞனின் வேடத்தில் நடித்துள்ளார். அஸ்வத் இசையமைக்க, அருள் வின்சென்ட் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: