அமலாபால், ஜூவாலா கட்டா தான் என் விவாகரத்துக்கு காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் கூறுவது பொய் என நிரூபிக்க என் பிரிவின் உண்மையான காரணத்தைக் கூற முடியாது என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அமலாபால் உடன் ஏற்பட்ட பழக்கம் தான் விஷ்ணு விஷால் விவாகரத்துக்குக் காரணம் என்று அப்போது பலரும் பேசினர்.
இதையடுத்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் நட்பு பாராட்டி வந்த விஷ்ணு விஷால், வெளிப்படையாக புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிடத் தொடங்கினார். இதையடுத்து ஜுவாலா கட்டாவுடன் ஏற்பட்ட பழக்கம் தான் விஷ்ணு விஷாலின் விவாகரத்துக் காரணம் என்று பேசப்பட்டது.
இதுகுறித்து மவுனம் காத்து வந்த விஷ்ணு விஷால் இந்தியா டுடே ஊடகத்தின் பேட்டியில் இத்தகவல்களை மறுத்துள்ளார். அவர் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, ஜுவாலா கட்டாவினால் எனது மனைவியை நான் பிரிந்ததாக சொல்கிறார்கள். சிலர் ராட்சசன் படத்தில் நான் அமலாபால் உடன் உறவில் இருந்ததாக சொல்கின்றனர்.

விஷ்ணு விஷால் | அமலாபால்
அவர்கள் கூறுவது பொய் என நிரூபிக்க நான் என் மனைவியை பிரிந்ததற்கான உண்மையான காரணத்தை வெளியில் கூற முடியாது. அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித் தெரியாமலேயே பலர் கருத்து கூறி வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும் போது, வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமெனில் என்னுடைய இதயத்தில் காதலுக்கு இடமில்லை. காதல் திருமணத்துடன் சம்பந்தப்பட்டது தான் ஆனால் அந்த அத்தியாயம் என்னுடைய வாழ்க்கையில் முடிந்துவிட்டது.

விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா
என்னுடைய திருமணம் காதல் திருமணம் தான். நானும் எனது மனைவியும் 11 வருடங்கள் ஒன்றாக இருந்தோம். அந்த நாட்களை மறப்பது எளிதானதல்ல. ஆனால் வாழ்க்கையில் துணை இருக்க வேண்டும் என்பதை நம்பக்கூடியவன் தான் நான். ஆனால் அந்த நாட்கள் கடந்துவிட்டன.
நம்முடைய இன்ப, துன்பங்களை பகிர்ந்துகொள்ள ஒரு ஆள் தேவை. என்னுடைய பிரிவிற்கு பின்னர் நான் ஜுவாலா கட்டாவை சந்தித்தேன். அவருடன் நிறைய நாட்களை கழித்திருக்கிறேன். ஜுவாலா மிகவும் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டவர். அதுதான் நான் அவரை விரும்பக் காரணம்.
ஜூவாலா கட்டாவும் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. இந்த உறவு நன்றாக சென்று கொண்டிருக்கிறது. பார்த்தவுடன் காதல் வரும் 18 வயது இளைஞரின் உணர்வு எனக்கு இல்லை. நான் அந்தக் கட்டத்தை கடந்துவிட்டேன். எனக்கு 35 வயதாகிறது. இப்போது எனது சிந்தனைகள் முதிர்ச்சியடைந்து விட்டன. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.” என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: விஜய் - அஜித் ரசிகர்களின் அநாகரீக பதிவுகள்...! கடுமையாக சாடிய விவேக்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.