விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து அமலாபால் நீக்கப்பட்ட விவகாரத்தில், அமலாபாலுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ரோகாந்த் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கிறார். அவருக்கு வில்லனாக தடம் பட இயக்குநர் மகிழ் திருமேனி நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 14-ம் தேதி பழனியில் தொடங்கியது. அங்கு விஜய் சேதுபதி - வில்லன் மோதும் காட்சிகளை படமாக்கிய படக்குழு, தற்போது ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது.
இதற்கிடையே, திடீரென இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருந்த அமலாபால் படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் நடிகை மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கால்ஷீட் பிரச்னையால் அமலாபால் விலகியதாக செய்திகள் வெளியாகின.
படத்திலிருந்து விலகியது குறித்து அறிக்கை வெளியிட்ட அமலாபால், “மும்பையில் எனது தனிப்பட்ட செலவில் நான் ஷாப்பிங் செய்தேன். ஆனால், தயாரிப்பு நிறுவனம் எப்போதும் பட்ஜெட் விவகாரத்தில் முணுமுணுத்துக்கொண்டே இருந்தனர். நான் படத்தில் இருப்பது பிடிக்கவில்லை என்று தயாரிப்பாளர் எனக்கு தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பினார். ஆடை படத்தின் டீசரைப் பார்த்த பிறகுதான் தயாரிப்பாளர் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அமலாபாலின் இந்த அறிக்கைக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால், ஒரு நடிகர் துணிந்து பேசுவதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. பலமுறை நடிகர்கள் மீதுதான் தவறு என்பது போல சம்பவங்கள் நடந்துள்ளன. எத்தனை தயாரிப்பாளர்களால் நான் எப்படியெல்லாம் மோசமாக நடத்தப்பட்டேன் என்பதைச் சொல்ல வேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். ஆனால், எப்போதும் அவர்களை ‘முதலாளி’ என்று மரியாதையுடன் தான் அழைத்திருக்கிறேன்.
Happy to see an actor speak up...Numerous times it so happens that actors are the ones who are at ‘fault’ by ‘default’ ...Ive been tempted so many times to share how badly i was treated by a number of producers but then v still giv them the respect as a ‘Modhalaali’ :) 1/2 https://t.co/LGInQv0XJS
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) June 27, 2019
நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போலத்தான் சினிமாவுக்கும். சில அற்புதமான தயாரிப்பாளர்களுடனும் நான் பணியாற்றியுள்ளேன். ஆனால், உணர்வு, தொழில், உடல் ரீதியாகவும் நடக்கும் இந்த அநீதி குறித்துப் பேசும் நேரம் வந்துவிட்டது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
நடிகை பூர்ணாவின் கியூட் போட்டோஸ்!
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.