Home /News /entertainment /

இன்று நேற்று நாளை 2-ம் பாகத்தில் இணைந்த பிரபலங்கள்!

இன்று நேற்று நாளை 2-ம் பாகத்தில் இணைந்த பிரபலங்கள்!

இன்று நேற்று நாளை

இன்று நேற்று நாளை

இன்று நேற்று நாளை 2-ம் பாகத்தின் சூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்க உள்ளது.

  • News18
  • Last Updated :
    இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் கருணாகரன்.

    ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான படம் இன்று நேற்று நாளை. விஷ்னு விஷாலுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருந்தார்.

    இவர்களுடன் கருணாகரன், டி.எம்.கார்த்திக், பகவதி பெருமாள், ஜெயப்பிரகாஷ், அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சி.வி.குமார் மற்றும் ஞானவேல் ராஜா இணைந்து தயாரித்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் 2-ம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பதாகவும், அவரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி.கார்த்திக் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த கருணாகரன் 2-ம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.



    Also watch

    Published by:Prabhu Venkat
    First published:

    Tags: Actor Vishnu Vishal

    அடுத்த செய்தி