Home /News /entertainment /

அமலா பாலுடன் திருமணமா? விஷ்ணு விஷால் ட்வீட்!

அமலா பாலுடன் திருமணமா? விஷ்ணு விஷால் ட்வீட்!

நாங்களும் மனிதர்கள்தான்... அமலா பாலுடனான இரண்டாவது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷ்ணு விஷால்.

  • Last Updated :
நாங்களும் மனிதர்கள்தான்... அமலா பாலுடனான இரண்டாவது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால் நடிப்பில் அக்டோபர் மாதம் வெளியான ராட்சசன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட்டானது. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் தனது மனைவி ரஜினி நட்ராஜ்-ஐ விவாகரத்து செய்தார்.

தற்போது விஷ்ணு, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்துக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், விஷ்ணு நடிகை அமலா பால்-ஐ இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளப் போவதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஷ்ணு விஷால் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘‘ என்ன ஒரு முட்டாள்தனமான செய்தி. தயவுசெய்து பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள். நாங்களும் மனிதர்கள்தான், நாங்களும் குடும்பத்துடன் தான் வசித்து வருகிறோம். இது தொடர்பாக யாரும் எதுவும் எழுத வேண்டாம்’’ என்று ஒரு வணக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

Published by:Ilavarasan M
First published:

Tags: Amala paul, Vishnu vishal

அடுத்த செய்தி