பாலிவுட்டில் அறிமுகமாகும் விஷால்?

விஷால்

தமிழில் வெற்றி பெற்றதைத் தொடந்து, தெலுங்கில் ’அபிமன்யுடு’ என்ற பெயரில் வெளியானது.

 • Share this:
  நடிகர் விஷால் பாலிவுட்டில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  கடந்த 2018-ம் ஆண்டில் விஷால் நடிப்பில் வெளியான படம் ‘இரும்புத்திரை’. டிஜிட்டல் யுகத்தில் நடக்கும் சைபர் குற்றங்களை மையமாக வைத்து இதனை இயக்குநர் மித்ரன் பி.எஸ் இயக்கியிருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஹீரோயினாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர். தமிழில் வெற்றி பெற்றதைத் தொடந்து, தெலுங்கில் ’அபிமன்யுடு’ என்ற பெயரில் இரும்புத்திரை படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

  இந்நிலையில், தற்போது இந்தப்படம் பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. இதன் மூலம் வில்லனாக அவதாரம் எடுக்கவிருக்கிறாராம் விஷால். அதாவது இரும்புத்திரை படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் விஷால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  அந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் யார் என்ற தகவல்கள் குறித்து இன்னும் தெரியவில்லை. ஆகவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர சக்ரா, துப்பறிவாளன் 2 ஆகியப் படங்கள் தற்போது விஷால் கைவசம் உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: