ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மிஷ்கின் ஸ்டைலில் வெளியான விஷாலின் துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக்!

மிஷ்கின் ஸ்டைலில் வெளியான விஷாலின் துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக்!

துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக்

துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    ‘துப்பறிவாளன் 2’  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

    பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தில் விஷாலின் கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரம் பலரால் பேசப்பட்டது.

    முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் படக்குழு ஈடுபட்டது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் துவங்கி நடைபெற்று வந்தது. இதில் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யா உள்ளிட்டோர் நடிக்க இளையராஜா படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமானார்.

    இந்தப் படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமானதால் படத்திலிருந்து மிஷ்கின் நீக்கப்பட்டார். இதையடுத்து மீதமிருக்கும் படத்தை விஷாலே இயக்குவதாக அறிவித்தார்.

    இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் கையில் குடையுடன் வரும் விசாரணை அதிகாரியாக விஷால் தோன்றியுள்ளார்.

    மேலும் விஷால், இளையராஜா ஆகியோரது பெயர்கள் மட்டுமே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: தொகுப்பாளர் லோகேஷை மருத்துவமனையில் சந்தித்து உதவிய விஜய் சேதுபதி!

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor vishal, Thupparivalan 2