விஷாலின் ‘சக்ரா’ வெளியீட்டை முடிவு செய்த படக்குழு

விஷாலின் ‘சக்ரா’ வெளியீட்டை முடிவு செய்த படக்குழு

சக்ரா

சக்ரா திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு முடிவு செய்துள்ளது.

  • Share this:
இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘சக்ரா’. விஷால் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.

இவர்களுடன் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆன்லைன் முறைகேட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் தனது தந்தையின் அசோகச் சக்கர பதக்கத்தை தேடிக் கண்டுபிடிக்கும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்வது குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: ரஜினியை சந்தித்த சிவா - விரைவில் வெளியாகும் அண்ணாத்த அப்டேட்

சமீபத்தில் திரையரங்கில் வெளியான ‘மாஸ்டர்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த படக்குழு ‘சக்ரா’ திரைப்படத்தை பிப்ரவரி 19-ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சக்ரா படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு தர வேண்டிய ரூ.58.35 லட்சம் செலுத்துமாறு பைனான்சியர் விஜய் கோத்தாரி சார்பில் நடிகர் விஷாலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: