விஷாலின் ‘சக்ரா’ பட ட்ரெய்லர் முன்னோட்டம் ரிலீஸ் - வீடியோ
சக்ரா பட ட்ரெய்லரின் முதல் பார்வை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- News18 Tamil
- Last Updated: June 22, 2020, 6:29 PM IST
இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் சக்ரா. விஷால் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.
ஆன்லைன் முறைகேட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் தனது தந்தையின் அசோகச் சக்கர பதக்கத்தை தேடிக் கண்டுபிடிக்கும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் முன்னோட்டத்தை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக இத்திரைப்படம் குறித்து பேசியிருந்த விஷால், இன்றைய அதிநவீன தொழில்நுட்பத்தில் மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டால் பெரிய விஷயமாக கருதுகிறோம். ஆனால் உங்கள் வாழ்க்கையே ஹேக் செய்யப்பட்டால்? நவீன தொழில்நுட்பத்தில் பல மோசடிகள் நடைபெறுகின்றன. அதைப்பற்றி சக்ரா திரைப்படம் பேசும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.” என்று கூறியிருந்தார்.
இன்று காலை இத்திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ட்ரெய்லர் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.