முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விசாரணை பட கதாசிரியருக்கு சிறந்த நடிகருக்கான விருது

விசாரணை பட கதாசிரியருக்கு சிறந்த நடிகருக்கான விருது

 லாக்கப் நாவலை சந்திர குமார் எழுதியிருந்தார். நாவல் பிடித்துப் போய் ஒரு மணிநேர திரைப்படமாக வெற்றிமாறன் அதனை எடுத்தார்.

லாக்கப் நாவலை சந்திர குமார் எழுதியிருந்தார். நாவல் பிடித்துப் போய் ஒரு மணிநேர திரைப்படமாக வெற்றிமாறன் அதனை எடுத்தார்.

லாக்கப் நாவலை சந்திர குமார் எழுதியிருந்தார். நாவல் பிடித்துப் போய் ஒரு மணிநேர திரைப்படமாக வெற்றிமாறன் அதனை எடுத்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :

    வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் எம்.சந்திர குமார் எழுதிய லாக்கப் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. திரைப்படம், குறும்படங்கள் என நடித்து வரும் சந்திர குமாருக்கு மும்பை சுயாதீன குறும்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

    தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் லாக்கப் நாவலை சந்திர குமார் எழுதியிருந்தார். நாவல் பிடித்துப் போய் ஒரு மணிநேர திரைப்படமாக வெற்றிமாறன் அதனை எடுத்தார். ஒரு மணி நேர படத்தை விற்பனை செய்ய எந்த வழியும் இல்லாததால் விசாரணை படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் கதையை வெற்றிமாறனே எழுதி படமாக்கி முழுநீளத் திரைப்படமாக்கினார். விசாரணையின் முதல் பகுதி மட்டுமே லாக்கப் நாவல்.

    இதையும் படிங்க.. மரணத்திற்கு பிறகும் ரசிகர்கள் மத்தியில் வாழும் விஜே சித்ரா!

    சந்திர குமார் இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த குறள் - 75 குறும்படம் கொல்கத்தா, டெல்லி குறும்பட விழாக்களில் சிறந்த குறும்படத்துக்கான விருதுகளை வென்றது. மும்பையில் நடந்த சுயாதீன குறும்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது குறள் - 75 இல் நடித்த சந்திர குமாருக்கு கிடைத்துள்ளது.

    இதையும் படிங்க.. அமீர் - பாவ்னி உறவை பற்றி பேசி சண்டையில் சிக்கிய பிரியங்கா!

    இந்த குறும்படத்தை புவனேஷ்வரன் என்பவர் இயக்கியிருந்தார்.சந்திர குமார் அதர்வாவின் குருதி ஆட்டம், அருண் விஜய்யின் யானை படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இதில் குருதி ஆட்டம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. வேறு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published: