’அப்பாவாக’ போகும் விஜய் டீவி பிரபலம் - இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு குவியும் வாழ்த்து!

வினோத் பாபு மற்றும் அவரது மனைவி

மனைவி கர்ப்பமாக இருப்பதையும், விரைவில் குழந்தை பிறக்க இருப்பதையும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
விஜய் டீவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வினோத் பாபு, தான் அப்பாவாக போகும் செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் வினோத் பாபு. அடுத்து, அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’சுந்தரி நீயும், சுந்தரன் நானும்’ தொடரில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். அடுத்ததாக, விரைவில் ஒளிபரப்பாக உள்ள ’தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலும் கதாநாயகனாக நடிக்கும் அவர், தன் வீட்டின் இனிப்பான செய்தி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், மனைவியுடன் இருக்கும் அவர், விரைவில் தங்கள் குடும்பம் வளரப்போகிறது எனக் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதாவது, மனைவி கர்ப்பமாக இருப்பதையும், விரைவில் குழந்தை பிறக்க இருப்பதையும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு சக நடிகர்களும், இன்ஸ்டாகிராம் நெட்டிசன்களும் வினோத் பாபுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வினோத் பாபு அறிமுகமான ‘சுந்தரி நீயும், சுந்தரன் நானும்’ சீரியல் விஜய் டீவியில் 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. அவருக்கு ஜோடியாக தேஜஸ்வினி நடித்தார். 405 எபிசோடுகளுடன் கடந்த மார்ச் மாதத்துடன் தொடர் நிறைவு பெற்றது. காதல், கலாட்டா, சண்டை என பரபரப்பாக இருந்தது. பாட்டியின் அரவணைப்பில் வளரும் ஹீரோ, அக்கா மற்றும் தாயின் அரவணைப்பில் வளரும் ஹீரோயின் தேஜஸ்வனியுடன் முதல் சந்திப்பில் இருந்தே மோதலில் ஈடுபடுகிறார். 
View this post on Instagram

 

A post shared by Vinoth babu (@vinothbabu_m)


ஹீரோ வினோத் பாபு, யார் சொல்லுக்கும் கட்டுப்பட மாட்டார், பாட்டியைத் தவிர. எதிரும், புதிருமாகவே இருவரும் இருக்கும்போது தேஜஸ்வனியை பேரனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என விரும்புகிறார் ஹீரோவின் பாட்டி. அவரின் விருப்பம் நிறைவேறியதா? என்பதைக் கொண்டு பல்வேறு திருப்பங்களுடன், சுவாரஸ்யமாக இந்தத் தொடர் நிறைவடைந்தது. இதனையடுத்து அவர், ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலும் நடிக்கிறார். இந்த சீரியலின் புரோமோவை அண்மையில் விஜய் டீவி ஒளிபரப்பி, சர்ச்சைக்குள் சிக்கியது.

Also read... ராம் சரண் படத்தின் நாயகி யார்? - அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஷங்கர்!

கோவில் ஒன்றில் காதல் ஜோடி திருமணம் செய்துகொள்ளும்போது குறுக்கிடும் கதாநாயகன் வினோத் பாபு, அவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலியை பறிக்கிறார். இதனை வேடிக்கை பார்த்த கதாநாயகி, வினோத் பாபுவை கடுமையாக எச்சரிக்கிறார். அப்போது, மஞ்சள் கயிற்றில் மூனு முடிச்சு போட்டா, பொண்டாட்டியா? என கேட்டுவிட்டு, அம்மன் கழுத்தில் இருக்கும் தாலிக்கயிற்றை எடுத்து கதநாயகியின் கழுத்தில் போட்டுவிடுகிறார். இந்த புரோமோவைப் பார்த்த திருவள்ளுர் எஸ்.பி கட்டாயமாக தாலி கட்டினால் 3 வருஷம் ஜெயில் என டிவிட்டரில் எச்சரித்தார். இதன்பிறகு இந்த சீரியலின் புரோமோவை பலரும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். இதன்மூலம் வினோத் பாபு யார்? என்பது பரவலாக தெரிய தொடங்கியுள்ளது. சீரியல் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: