ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழ் படங்களில் நடித்தால் எனது சுதந்திரம் பறிபோய்விடும் - வினீத் சீனிவாசன்

தமிழ் படங்களில் நடித்தால் எனது சுதந்திரம் பறிபோய்விடும் - வினீத் சீனிவாசன்

வினீத் சீனிவாசன்

வினீத் சீனிவாசன்

Vineeth Sreenivasan | மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக இருந்து வரும் வினீத் சீனிவாசன் தமிழ் படங்களில் நடித்தால் தனது சுதந்திரம் பறிபோய்விடும் என தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2010ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் வெளியான 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வினீத் சீனிவாசன். இவர் நடிகர், பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பார், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், படைப்பு இயக்குர், பின்னணிக் கலைஞர் என பல துறைகளிலும் தனது திறமையால் அசத்தி வருகிறார்.

வினீத் சீனிவாசன் 2003 ஆம் ஆண்டில் 'கிளிச்சுந்தன் மாம்பழம்' படத்தில் இடம்பெற்ற "கசவிண்டே தட்டமிட்டு" என்ற பாடலைப் பாடி முதன் முதலில் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் 2008 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'சைக்கிள்' திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகராகவும் அறிமுகமானார்.

அதன்பின் இவரது இயக்கத்தில் வெளியான இரண்டாவது படமான 'தட்டத்தின் மரயத்து' திரைப்படமனது 2012ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டு இவரது தம்பி தயான் சீனிவாசன் நடிகராக அறிமுகமான 'திரா' படத்தை 2013ல் திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் இவர் இயக்கத்தில் வெளியான 'ஹிருதயம்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் 50 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'முகுந்தன் உன்னி அசோயேட்ஸ்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வினீத் சீனிவாசனிடம் 'ப்ரித்விராஜ், துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகியோர் போல நீங்கள் ஏன் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை' என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் தமிழில் நடிப்பதை தவிர்ப்பத்திற்கு சுதந்திரம்தான் காரணம் கூறியிருக்கிறார். 'சென்னையில் என்னைப்பற்றி யாரென்றே தெரியாத மக்கள் இருக்கும்பகுதியில் தான் தற்போது வசித்து வருகின்றேன். அதனால் என்னால் சுதந்திரமாக வெளியே சென்று வர முடிகிறது. நான் தமிழில் படம் நடித்து ஒருவேளை அந்த படம் வெற்றியும் பெற்றுவிட்டால் அதன்பிறகு எனது திரையுலக பயணத்திலும் சரி, வாழ்க்கை பயணத்திலும் சரி, மாற்றங்கள் வர ஆரம்பித்துவிடும். மேலும் எனக்கு இங்கே இப்போது கிடைக்கும் சுதந்திரங்களும் பறிபோய்விடும். எனவே தான் நான் தமிழில் நடிப்பதை தவிர்த்து வருகின்றேன். வேறு ஒன்றும் காரணமில்லை. தமிழகம் எனக்கு பிடித்து இருப்பதால் தான் சென்னையில் வசிக்கிறேன். மாதத்திற்கு நான்கைந்து நாட்கள் மட்டுமே கேரளாவிற்கு சென்று வருவேன். நான் மட்டுமல்ல மோகன்லாலின் மகன் பிரணவுக்கு கூட தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் இதே சுதந்திரம் காரணமாகத்தான் அவரும் தமிழில் நடிப்பதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார்' என்று வினீத் சீனிவாசன் கூறியுள்ளார்.

Also Read : ஹாலிவுட் படத்துக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்த கமலின் ஆளவந்தான் படம்!

வினீத் சீனிவாசன் நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான சீனிவாசனின் மகன் ஆவார். இவர் சென்னை லயோலா கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார் என்பது குறிப்புடத்தக்கது..

Published by:Selvi M
First published:

Tags: Tamil Cinema, Tamil News