Vikram Vedha: விக்ரம் வேதா இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்

சயிப் அலிகான்-ஹிர்த்திக் ரோஷன்

விக்ரம் வேதா இந்தி ரீமேக் அடுத்த வருடம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். 

  • Share this:
    ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புஷ்கர் - காயத்ரி இயக்கிய விக்ரம் வேதா தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மாதவன், விஜய் சேதுபதி நடித்த இப்படத்தின் திரைக்கதை விக்ரமாதித்யன், வேதாள கதையைப் போல் எழுதப்பட்டிருந்தது புதிதாக ரசிகர்களை கவர்ந்தது. படம் வெளியான போதே, இதனை இந்தியில் ரீமேக் செய்ய புஷ்கர் - காயத்ரி முடிவு செய்தனர். தயாரிப்பாளரும் அமைந்தார்.

    ஹிர்த்திக் ரோஷன், சயிப்அலிகான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சயிப்அலிகான் ஓகே சொல்ல, கால்ஷீட் பிரச்சனையால் ஹிர்த்திக் நோ சொன்னார். பிறகு அமீர்கான் கதைப் பிடித்து நடிப்பதற்கு சம்மதித்தார். சென்னையில் நடக்கும் கதையை ஹா ங்காங்கில் நடப்பதாக மாற்றினால் சீன ரசிகர்களை கவர முடியும் என அவர் ஐடியா சொல்ல, அதற்கேற்ப கதை மாற்றப்பட்டது

    Photos : நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஸ்..

    எல்லாம் ஓகேவாகி படப்பிடிப்புக்கு கிளம்பும் நேரம் கொரோனா பேரிடர் அனைத்தையும் கலைத்துப் போட்டது. ஹாங்காங்கில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல். ஹாங்காங் இல்லையென்றால் இந்தப் படமும் வேண்டாம் என அமீர் விலக, கொரோனாவால் படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருந்த ஹிர்த்திக் ரோஷன் கால்ஷீட் தர முன் வந்தார். தற்போது ஸ்கிரிப்ட் பக்காவாக தயாரான நிலையில், பட அறிவிப்பை ரிலீஸ் தேதியுடன் அறிவித்திருக்கிறார்கள். 2022 செப்டம்பர் 30 இந்தி விக்ரம் வேதா திரைக்கு வருகிறது. முதலில் பேசப்பட்ட அதே ஹிர்த்திக் ரோஷன், சயிப் அலிகான் நடிக்கின்றனர்

    இந்தப் படம் தவிர ஜிகர்தண்டா, மாநகரம், ராட்சசன், 96 உள்பட அரை டஜன் தமிழ்ப் படங்கள் இந்தியில் ரீமேக்காவது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: