நடிகர் விக்ரம் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார்.
ஸ்ரீநிதிஷெட்டி விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் 7 கெட்டப்புகளில் விக்ரம் காட்சியளித்திருந்தார்.
இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் இடம்பெற்ற ‘தும்பி துள்ளல்’ என்ற பாடல் மற்றும் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர், ஜனவரி 9-ம் தேதி படத்தின் டீசரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவார் என்ற ஸ்பெஷலான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
To the legendary @arrahman sir whom we are extremely honoured to have on- board for #Cobra, Wishing you a fabulous birthday
And to all the cinema fans out there, #CobraTeaser coming ur way on 9th Jan#ChiyaanVikram @AjayGnanamuthu @Lalit_SevenScr @IrfanPathan @SrinidhiShetty7 pic.twitter.com/Mkdc1e14kQ
— Seven Screen Studio (@7screenstudio) January 6, 2021
மேலும் படிக்க: Happy Birthday AR Rahman | இசைபுயலின் 7 உணர்வுபூர்வமான பாடல்கள் (வீடியோ)
தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘கோப்ரா’ படக்குழு இருப்பதாக கூறப்படுகிறது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என இரண்டு வெற்றிப்படங்களைத் தொடர்ந்து விக்ரமுடன் அஜய் ஞானமுத்து கூட்டணி அமைத்திருப்பதால் தமிழ் திரையுலகமே ‘கோப்ரா’ படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: A.R.Rahman, Cobra Movie, Kollywood