• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சீயான் 60 - வெளியான சூப்பர் அப்டேட்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சீயான் 60 - வெளியான சூப்பர் அப்டேட்

விக்ரம் - துருவ் விக்ரம்

விக்ரம் - துருவ் விக்ரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் படத்தில் துருவ் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.

  • Share this:
    கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரமின் 60 வது படம் தயாராகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாததால் தற்காலிகமாக சீயான் 60 என அழைக்கப்படும் இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    சீயான் 60 ஆக்ஷன் த்ரில்லராக தயாராகி வருகிறது. இதுவொரு கேங்ஸ்டர் படம். விக்ரம் வில்லன் சாயல் கொண்ட கதாபாத்திரத்திலும், துருவ் விக்ரம் போலீஸாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா, முத்துக்குமார், சனத் ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை.

    சீயான் 60 படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து வந்தது. துருவ் விக்ரம், விக்ரம் இருவரும் இதில் கலந்து கொண்டனர். துருவ் விக்ரம் அவ்வப்போது டார்ஜிலிங்கில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வந்தார். கார்த்திக் சுப்பாராஜின் சில் அவுட் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.



     

    Also Read : வேதாளம் தெலுங்கு ரீமேக்.. சிரஞ்சீவியின் தங்கையாக நடிப்பது யார் தெரியுமா?

    தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, சீயான் 60 இல் துருவ் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேபாள் எல்லைப் பகுதியில் சில முக்கியமான காட்சிகளை எடுக்கின்றனர். அத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்கின்றன செய்திகள்.



    விக்ரமின் கடாரம் கொண்டான், கார்த்திக் சப்பாராஜின் ஜெகமே தந்திரம், துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா ஆகியவை தோல்வியடைந்த நிலையில், மூவருக்குமே முக்கியமான படமாக சீயான் 60 பார்க்கப்படுகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: