முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி?

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி?

சீதக்காதி படத்தில் விஜய்சேதுபதி.

சீதக்காதி படத்தில் விஜய்சேதுபதி.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் `சீதக்காதி' படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குனர் பாலாஜி தரணி தரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் படம் சீதக்காதி. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ளார். சீதக்காதி என்ற கலைஞரின் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சீதக்காதி படத்துக்காக விஜய் சேதுபதி மேக் அப் போடும் வீடியோ `தி மேக்கிங் ஆஃப் அய்யா’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி சங்கர், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோது, வயதான வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சீதக்காதி திரைப்படம் வரும் நவம்பர் 15-ம் தேதி வெளிவரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் சேதுபதி ஏற்கெனவே சூது கவ்வும், ஆரஞ்சுமிட்டாய் போன்ற படங்களில் வயதான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் 70 வயதுக்கும் அதிகமான ஒரு முதியவர் கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருப்பது இதுவே முதல் முறை. பாலாஜி தரணிதரன், விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

' isDesktop="true" id="59625" youtubeid="up340-rLgAU" category="entertainment">

First published:

Tags: Kollywood, Seethakaathi, Tamil movies, Vijyay Sethupathi