பாகுபலி ஸ்டைலில் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம்!

news18
Updated: October 11, 2018, 4:48 PM IST
பாகுபலி ஸ்டைலில் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம்!
விஜய் சேதுபதி.
news18
Updated: October 11, 2018, 4:48 PM IST
`சை ரா நரசிம்மா ரெட்டி’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும்  விஜய் சேதுபதியின்  புகைப்படம் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரைப்பட உலகில் பெரிதும் பேசப்பட்டு வரும் திரைப்படம் சைரா நரசிம்மா ரெட்டி. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்து வெளிவர இருக்கும் இத்திரைப்படத்தில் நயன்தாரா, சுதீப் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.

சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில், சிரஞ்சீவி நரசிம்ம ரெட்டியாக நடிக்கிறார். இப்படத்தை ராம் சரண் தயாரிக்கிறார்.

இந்நிலையில் சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் அவர் ஒப்பய்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தெரியவந்துள்ளது. ஒப்பய்யா நரசிம்ம ரெட்டிக்கு நெருங்கிய நண்பனாக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சை ரா நரசிம்மரெட்டி படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சுதீப்.


இப்படத்தின் படப்பிடிப்பு ஜியார்ஜியாவில் நடந்துவருகிறது. படப்பிடிப்பின்போது நடிகர் சுதீப்பும், விஜய் சேதுபதியும் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் விஜய் சேதுபதி பழங்கால கெட்டப்பில் உள்ளார்.

அமித்தாப் பச்சனின் கெட்டப்-வீடியோ:
Loading...


படத்தின் டீசர்: 

First published: October 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...