அமெரிக்காவில் ’மெர்சல்’ காட்ட இருக்கும் ’சர்கார்’

அமெரிக்காவில் ’மெர்சல்’ காட்ட இருக்கும் ’சர்கார்’
சர்கார் பட போஸ்டர்
  • News18
  • Last Updated: October 16, 2018, 4:49 PM IST
  • Share this:
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சர்கார்’ அமெரிக்காவில் பிரம்மாண்டமாக ரிலீசாக இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் பழ.கருப்பையா , ராதாரவி, யோகிபாபு, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் நவம்பர் மாதம் 6-ம் தேதி தீபாவளியன்று திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீசாக இருக்கிறது. தெலுங்கு டப்பிங் உரிமையை வல்லபனேனி அசோக் பெற்றுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிக இடங்களில் இந்தப் படம் ரிலீசாக இருக்கிறது. மேலும் அமெரிக்காவில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


இதற்கான அமெரிக்க வெளியீட்டு உரிமையை கோலிவுட் மூவிஸ் மற்றும் நர்மதா டிராவல்ஸ் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. விஜய் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே அமெரிக்காவில் அதிக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் சர்கார் என்ற பெருமையை இந்தப் படம் பெறுகிறது. See Also:
First published: October 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading