இந்தியில் ரீமேக்காகும் விஜயின் மாஸ்டர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

வசூலில் சாதனை படைத்து வரும் மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமோல் ஷைன், சினி 1 ஸ்டூடியோ, 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக எண்டமோல் நிறுவனட்தின் சிஇஓ அபிஷேக் ரெகே தெரிவித்துள்ளார்.

வசூலில் சாதனை படைத்து வரும் மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமோல் ஷைன், சினி 1 ஸ்டூடியோ, 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக எண்டமோல் நிறுவனட்தின் சிஇஓ அபிஷேக் ரெகே தெரிவித்துள்ளார்.

  • Share this:
நடிகர் விஜய் நடித்து வெளியாகி, வசூலில் பட்டைய கிளப்பி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமோல் ஷைன், சினி 1 ஸ்டூடியோ , 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மாஸ்டர் திரைப்படம் விரைவில் இந்தியில் தயாரிக்கப்பட இருக்கிறது. நடிகர், நடிகைகள் தேர்வு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வந்திருக்கிறது.

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டருக்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

மாஸ்டர் வெளியான 2 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.43 கோடியை வசூலித்து மாஸ்டர் சாதனை படைத்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் இந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்ட மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது.

வசூலில் சாதனை படைத்து வரும் மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமோல் ஷைன், சினி 1 ஸ்டூடியோ, 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக எண்டமோல் நிறுவனட்தின் சிஇஓ அபிஷேக் ரெகே தெரிவித்துள்ளார். இந்தி ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப மாஸ்டரை ரீமேக் செய்யற ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் இந்தி ரீமேக்கிற்கான நடிகர்கள் தேர்வு விரைவில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. விஜய் - விஜய் சேதுபதி கதாபாத்திரங்களில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
Published by:Arun
First published: