தல - தளபதி ரசிகர்களை சீண்டிய சித்தார்த்

news18
Updated: March 21, 2018, 7:27 PM IST
தல - தளபதி ரசிகர்களை சீண்டிய சித்தார்த்
news18
Updated: March 21, 2018, 7:27 PM IST
நடிகர் விஜயின் 62 - வது படத்தின் படப்பிடிப்பு திரைத்துறையினரின் போரட்டத்திற்கு மத்தியில் தொடர்ந்து நடைற்று வருவதை நடிகர் சித்தார்த் விமர்சித்துள்ளார். மேலும் விஜய் மற்றும் அஜித் பாவம் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்த போராட்டத்தின்படி கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு தமிழ் சினிமாவின் அனைத்து துறையினரும்       ஆதரவு தெரிவித்தனர். இதனால் தமிழ் சினிமாவின் அனைத்து படப்பிடிப்புகளும் முடங்கியது.

இந்நிலையில் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்புக்கென தயாரிப்பாளார்கள் சங்கம் சிறப்பு அனுமதி அளித்ததாகவும் விளக்கம் கொடுத்தது.

சிறப்பு அனுமதி பெற்று நடைபெற்று வரும் விஜயின் 62- வது படத்தின் படப்பிடிப்பிற்கு திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எதிர்ப்பு தெரிவித்தவர்களின் வரிசையில் தற்போது நடிகர் சித்தார்த்தும் இணைந்துள்ளார்.
விஜயின் 62 - வது பட படப்பிடிப்பு குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயின் பெயரை குறிப்பிடாமல் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

 அப்பதிவில் “ஒருவருக்கு சிறப்பு அனுமதி அளிக்கிறீர்கள் என்றால் அதே அனுமதியை அனைவருக்கும் அளியுங்கள். அனைவரும் சமம். சமத்துவமும் ஒற்றுமையும் இல்லாத சூழலில் கடவுள் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

இதையடுத்து, நடிகர் சித்தார்த்தை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்க் கருத்துக்களின் வாயிலாக விமர்சித்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்களின் விமர்சனம் குறித்து நடிகர் சித்தார்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தமிழ் சினிமாவிற்கு ஒரு பைசா கூட நன்மையில்லாத ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்னுடய ட்வீட்டுக்கு வந்த நூற்றுக்கணக்கான பதில்களை படியுங்கள். மோசமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். தேவையில்லாத விஷம், சம்பந்தமில்லாத கோபம். தேவையில்லாத இரு தரப்பு முட்டாள்கள் அனைவருடைய பெயர், நேரத்தை வீணடிக்கிறார்கள். பாவம் விஜய் மற்றும் அஜித்.
இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார்.
First published: March 21, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்